செவ்வாய், 5 ஜூன், 2018

# எனக்கும் உனக்கும் ஒரே ஆசை #

எனக்கான விடியல்களுக்கு
உன்னை சூரியனாக வேண்டுகிறேன்.
நீயோ நிலவாகி விடுகிறாய்.
அதனால் எனக்கு
இரவுகளே பிடித்துப் போனது.

எனக்கான உடைகளுக்கு
உன்னை கொக்கிகளாக வேண்டுகிறேன்.
நீயோ நூலாகி விடுகிறாய்.
கொக்கிகள் அப்படியே இருந்தாலும்
நூல் பிரிவதே எனக்கும் பிடிக்கிறது.

எனக்கான இரவுகளுக்கு
உன்னை இசையாக வேண்டுகிறேன்.
நீயோ மோகனம் மட்டுமே இசைக்கிறாய். முத்தத்திலும் உன் மோகனம் கேட்பதால்
சத்தம் இல்லாமலும் கேட்கப் பிடிக்கிறது.

எனக்கான குளியல்களுக்கு
உன்னை மஞ்சளாக வேண்டுகிறேன்.
நீயோ தண்ணீராகி விடுகிறாய்.
ஆடையோடு குளித்து நான் தோற்கிறேன்
ஆடைக்குள் நுழைந்து நீ ஜெயிக்கிறாய்.

எனக்கான உன் மூச்சை
முந்தானையில் முடிந்திருக்கிறேன்
மூச்சு முட்டுவதாய் கூறி
முடிச்சவிழ்ப்பதாய் கெஞ்சுகிறாய்.
பிரியும் போது தான் தெரிகிறது
நீ முந்தானையை அவிழ்த்திருக்கிறாய்.

உன்னால் மட்டும்  எப்படி முடிகிறது.
எங்கப்பனுக்கு யாரோவாய்,
எங்கம்மாவுக்கு வேலையாளாய்
என் தம்பிக்கு நட்பாய்
எனக்கு மட்டும் இருளிலும் நிழலாய்.

அடேய் சரவணா .....
எனக்கான ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு ஆசை சொல்கிறேன்.
நீயோ உன்னாசை சொல்கிறாய்.
ஒத்துக் கொள்வதாய் நடிக்கிறேன்.
ஒன்று தெரியுமா?
உண்மையில் நான் தான் ஜெயிக்கிறேன்.

முடிவில் தோற்றுவிட்ட
கவிதாயினி எழில்விழி
# அதையும் நீயே தா சாமி #

உன் வரவுக்கு பின்னர்தான்
வர்ணங்களற்ற எங்கள் வானவில்
தனக்குள் ஆயிரம் வர்ணங்கள்
உண்டென்பதை அறிந்து கொண்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
மெளனங்களால் மட்டுமே எழுதப்பட்ட
எங்கள் கவிதைகள் தமிழால் தங்களை
அலங்கரித்துக்கொண்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
அன்பென்ற உணர்வுக்கு
அன்புதான் பண்டமாற்று
என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
எங்கள் விடியல்களை
சூரியன் வந்து தொட  மறுத்தது
நிலவே வந்து தொடங்கி வைத்தது.

உன் வரவுக்கு பின்னர்தான்
 வார்த்தைகளுக்கு வர்ணம் பூசும்
 வாமன வித்தை எங்களுக்கு
 வசமாகிப்போனது.

உன் வரவுக்கு பின்னர்தான்
வாழ்க்கைச் சாரல்களில் நனைந்த
பட்டாம்பூச்சிகள் விலகிக்கொண்டது
எங்கள் விலாவில் இறக்கை முளைத்தது.

உன் வரவுக்கு பின்னர்தான்
அன்புக்கு கோபத்தையும்
கோபத்துக்கு அன்பையும்
கேடயமாக்க கற்றுக்கொண்டோம்.

உன் வரவுக்கு பின்னர்தான்
பிறப்பென்ற வார்த்தைக்கு
உன் பிறப்பே பொருளென்று
பிரம்மன் வந்து சொல்லிச்சென்றான்.

உன் வரவுக்கு பின்னர்தான்
தென்றல் எங்கள் வாசல் வந்து
இன்றுதான்  நீ பிறந்தாய்
தினமும் தினமும் சொல்கிறது.

உன் வரவே எங்களுக்கு வரமாகி
போனதென்றால் அதை தந்த நீ சாமி!
உன் உருவே எங்களுக்கு உறவாகி
போகுமென்றால்
அதையும் நீயே தா சாமி!!

அன்பு மகளுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூறுவதில் மகிழ்வது
கவிதாயினி எழில்விழி, சண்முகநாதன், சுலோச்சனா கருப்பசாமி,
சுசீந்திரகுமாரி,
எழில் ஆதித்தன்,
மற்றும்
மைக்கேல்ராஜ், ஸாம், ஏஞ்சல்,
பெற்றோர், பெரியோர்,
கற்றோர், மற்றோர்,
உற்றார், உறவினர்களுடன்
மாறாத நட்புடையோர்.
நான் இதுவரை புகைப்படங்களுக்காக பதிவுகள் எழுதியதில்லை. ஆனால் எதேச்சையாக பார்க்க நேர்ந்த இந்த புகைப்படத்தின் நேர்த்தி பிரமிக்க வைத்தது. அதனால் முதல் முயற்சி.

#  வா, என் ராஜகுமாரா! #

நீ மோதி அல்ல
நீர் மோதி வலிக்கும்
என் பாதங்களுக்கு
உன் சூடான முத்தங்களால்
சுகமாக ஒத்தடம் கொடு.

ஆடைக்குள் மறைந்தாலும்
அனலாக கொதிக்கும் என்
அந்தரங்க பெருமூச்சுகளை
உன் பாதரசப்பார்வைகளால்
மேல் மூச்சு வாங்கச்செய்!

ஒப்புக்கு கட்டியிருக்கும்
என் மார்க்கச்சை முடிச்சுக்குள்
பால் கட்டிய மார் வலியை
வலிக்காமல் வாசம் செய்
என் வாழ்நாளை மோசம் செய்!

முக்காலும் கழன்று விட்ட
என் வளையல்கள்
முத்தத்தை விட சத்தமிடும்.
முழுவதும் கழற்றி விடு.
என் உயிர் மூச்சை சுழற்றி விடு!

புஜங்களுக்கு வலிக்காமல்
என் வங்கிகளை கழற்றி
உன் மன வங்கியில் அடகு வை.
முத்தக் கடனை மொத்தமாய் தருகிறேன்.
மீட்டு எனக்கு மீண்டும் மாட்டு!

எப்படி அணைப்பாயோ?
எனக்குத் தெரியாது.
என் பச்சையின் அச்சை
உன் மார்பில் பதிய வை!

நெடுங்கழுத்தும் நீள் நாசியும்
சிறு செவியும் செவ்வாயும்
கருங்கூந்தலும் கண்மணியும்
என் அப்பன் தந்தது!

ஜிமிக்கி கம்மலும் சிறு பூ மூக்குத்தியும்
கண்களுக்குள் காதலும்
கருந்தேகத்துக்குள் காமமும்
என் கண்ணாளனே நீ தந்தது!

அடேய் சரவணா .........
நான் தனிமரமாம்.
தோப்பாகி கொள் என
உன் நந்தவனமே பூ தந்தது.
ஒப்பந்தத்தை சொல்லிவிட்டாயோ?
தினம் ஒத்தை முழமே தருகிறது.

ஒத்த மொழம் பூவு கொடு
நான் ஒத்த புள்ள பெத்து தாரேன்.
பத்து மொழம் பூவெல்லாம்
நாஞ்சத்தியமா கேக்க மாட்டேன்.

கவிதாயினி எழில்விழி
இந்த சரவணக்கவிதை க்கு தலைப்பு தந்தமைக்கு என் இனிய தோழி Sulochana Karuppusamy  க்கு நன்றி.

# ஒற்றைப்பனை மரம் #

அது எப்படி?
நம் சந்திப்புக்காலைகளின்
சம்பிரதாய விசாரிப்புகளை எல்லாம்
என் உதடுகளில் இருந்தே
உன்னால் தொடங்க முடிகிறது?

காயப்படுத்துவதற்கு என்றே
காதலிக்கிறாய் போலும்.
அதற்காக இப்படியா ?
இதழ்களிலும் இடுப்பிலுமா
கடித்து வைப்பது?

உன் மெளனங்களுக்கு
ஒலிகொடுத்தால் ''இச்" சென்ற
சப்தமே முப்போதும் கேட்கிறது.
உம் என்ற என்  மொழி கூட
ஊமையாகித்தான் கிடக்கிறது.

என் கால்களால் நீ நடப்பதாக
ஊருக்குள் பீற்றித்திரிகிறாய்.
உன் நிழலில் நான் நடப்பதை
ஊருக்குள் யாரிடம் போய்
நான் பீற்றிக்கொள்வது?

என் முத்த தாக்குதல்களுக்கு
கேடயமாக உன் உதடுகளை நீ
உபயோகப்படுத்துவதுதான்
இந்த உலகில் "கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் "ன்
உச்சபட்ச விஞ்ஞான  கண்டுபிடிப்பு,

எட்டிக்காயோ? பாவக்காயோ?
மென்று வந்து நீ தரும்
முத்தம் இனிப்பதாய் சொல்வது
நான் மட்டும்தானா?
இல்லை
வேறெவளுக்காவது இனிப்பதாக நீ
கேள்வியாவது பட்டிருக்கிறாயா?

உன் மௌன விசாரிப்புகளில்
என் உடல் நலம் பெற்றதும்
இருட்டுப் பொழுதுகளில்
நானுன் நிழலானதும்
இயல்பாய் நிற்கும் இந்த
ஒற்றைப்பனை மர அடியில் தானே
அரங்கேறியது.

இத்தனைக்கும் சாட்சியான
இந்த ஒற்றைப்பனை மரம்
எப்போதும் போல இப்போதும்
இரண்டு நிமிடத்திற்கு மேல்
யாருக்கும் நிழல் தர மறுக்கிறது.
நம்மைத்தவிர.
நான் தனியாக வரும் போதும்
என்னிடம் அன்பு மறுப்பதில்லை.

அடேய் சரவணா ..........

பங்காளி உறவும்
பனைமர நிழலும்
உன்னுடைய காதலும்
ஒன்று தானோ சரவணா.!!!

கவிதாயினி எழில்விழி.
# மெளனம் #

மெளனம்.
மொழிகளால் சொல்ல இயலாத
ஆயிரம் வார்த்தைகளைக்கூட - உன்
விழிகளால் சொல்லி விடுகிறாய்.
விழிகளால் சொல்ல இயலாத
ஆயிரம் வார்த்தைகளையும் கூட – என்
மெளனத்தால் சொல்ல இயலவில்லை.

மெளனம்.
எழுத்தால் கோடிட்டு காட்ட முடியாத
சில நிர்வாணங்களை - நம்
மெளனங்களால் அர்த்தப்படுத்தி
கொண்டதைப்போல
எனக்கும் உனக்குமான புரிதல்களை
நம் மெளனங்களே கோடிட்டு காட்டுகிறது.

மௌனம்.
மெளனத்தில் மெய் மட்டுமே உண்டு
அதனால்தான் உயிர் இருப்பதில்லை.
என் மெளனம் உன் மெய்யைச்சுடும்.
உன்  மெளனமோ என் உயிரையே சுடும்.
இருவர் மெளனமும் உயிர்மெய் ஆகி
தமிழோடு சேர்ந்தால் கவிதையும் பாடும்.

மௌனம்.
என் மெளனம் சம்மதம்
என்பது உன் இன்பமொழி.
என் மெளனம் நம்பிக்கை
என்பது உன் நட்பு மொழி.
என் மெளனம் வெற்றி
என்பது உன் காதல் மொழி
உன் மெளனம் இழப்பு
என்பது என் இறுதி மொழி
அதன் பின் என் விழிகள்
படித்ததெல்லாமே இருளின் மொழி.

மெளனம்.
என் பொய்க்கோபங்கள் - உன்
மெளனத்திடம் தோற்றுப் போகின்றன.
உன் நிஜக்கோபங்கள் - என்
மெளனத்திடம் தோற்றுப் போகின்றன.
வெற்றியோ தோல்வியோ 
நம் மெளனங்கள்
நம்மைப் பற்றி பேசிக்கொண்டதில்லை.
நமக்குள் மட்டுமே பேசிக்கொண்டன.

மெளனம்.
நட்பை மெளனமாய் சொன்னாய்.
நல்லவர்கள் கேட்டுக்கொண்டனர்.
உறவை மெளனமாய் சொன்னாய்,
ஊர் முழுதும் கேட்டுக்கொண்டது.
பாசத்தை மெளனமாய் சொன்னாய்,
பகலோடு இரவும் கேட்டுக்கொண்டது.
காதலையும் மெளனமாக சொன்னாய்,
அது மட்டும் காலனுக்கும் கேட்டது போலும்.

அடேய் சரவணா ........!
அப்போதெல்லாம் உன் மெளனத்துக்கு
பின் ஒரு புன்சிரிப்பு எட்டிப்பார்க்கும்.
இப்போதெல்லாம் உன் புன்சிரிப்புக்கு
பின் மெளனமே,எட்டிப் பார்க்கிறது.
எப்போதும் ஒன்று மட்டும்
நிச்சயமாய் தெரிகிறது.
சட்டத்திற்கு பின்னால் உன் மெளனமும்
சட்டத்திற்கு முன்னால் உன் மாலையும்.

மெளனமாய் கவிதாயினி எழில்விழி.
என் முகநூல் பக்கம் தவிர்த்து முதன்முதலாக நிலாச்சோறு அமைப்பில் எழுதி சான்றிதழ் பெற்றுத் தந்தது இந்த

# ஒற்றைத்தாமரை #

ஏரித்தாமரை விரிஞ்சிருச்சி,
எளங்காத்து அடிச்சிருச்சி,
வாடிக்கெடந்த வரிக்கமுகு
வாசம் வீசி வெடிச்சிருச்சி!

உன் வீட்டு வெள்ளாடு
என் வேலி தாண்டிருச்சி,
என் வீட்டு கருப்பாடும்
எளஞ்சூட்டில் கருகிருச்சி!

போன மாசம் நீ போகயிலே. - நான்
வானம் பாத்த பூமியானேன்.
மானம் வச்சி பாத்திருக்கேன் - நான்
கானம் பாடி சிரிச்சிருக்கேன்!

ஓலக்கதவு திறந்து வெச்சேன் - நான்
ஓலப்பாயும் விரிச்சி வெச்சேன்.
மாலைப்பொழுது மயங்கிருச்சி - மனம்
மாமன் ஒன்ன நெனச்சிருச்சி!

செல்லச்சண்டை போடப்போறேன் - நீ
மெல்லக்கட்டி அணைக்கப்போறே,
வெல்லமா நான் இனிக்கிறேனு - என்ன
கொல்லாம கொல்லப் போறே!

ஊருக்கெல்லாம் வெண்தாமரை - நான்
உனக்கு மட்டும் செந்தாமரை.
காத்திருக்குது சிறு தாமரை - உனக்காய்
பூத்திருக்குது இந்த ஒத்தைத்தாமரை!

கவிதாயினி எழில்விழி.
# அவன் ஒரு ஆண் ...... #

அப்பா,
பொறுமையாய் கற்றுக்கொள்ளுங்கள்.
பொருளாதார பாடமவன்.
பூக்களை மட்டுமே எண்ணிச்சொல்லும்
புள்ளியியல் பாடமவன்.

அப்பா,
வேசம் போட்டும் தன்னையே உழும்
வேளாண்மை பாடமவன்
சதுரங்களுக்குள் வட்டம் போடும்
சரித்திரப்பாடமவன்.

அப்பா,
மலைகளே மறித்தாலும் மாற்றி
சிலைகளாக்க தெரிந்தவன் - அவன்
கலவியில் பிறந்ததனால் - உங்கள்
கலைகளின் தாயவன்.

அப்பா,
பட்ட மரமும் பச்சை மரமும்
கலந்து கட்டிய கட்டுமரம்.
துடுப்பில் பாதி இடுப்பில் மீதி - உங்களை
இழுத்துச் செல்லும் குதிரை அவன்.

அப்பா,
கைப்பிடித்து கூட்டிச் செல்வதில்
கடிகார முட்கள் அவன்.
நொடிக்கொரு தரம் உன்னை
படியெடுத்துச்செல்லும் நொடி முள்ளுமவன்.

அப்பா,
புயற்காற்றில் நாணலாய் அவன்
பொழுதெல்லாம் அசைந்தாலும்
இரவுகளில் உன் தலை வருடி தன்னை
புயலுக்கு பின்னாகிக் கொள்பவன்.

அப்பா,
ஒதியம்தான் என்றாலும் உன்னை
உதிரம் ஊற்றியும் வளர்ப்பவன் - உன்
ஊதியத்தை மறைக்கும் போதும் உனக்கு
ஓதியதில் குறை சொல்லாதவன்.

அப்பா,
மறை பொருளே ஆனாலும்  ஒரு
குறையில்லா நிறைவவன். - முதியோர்
சிறை விடுத்துச்செல்லும் போதும் - சிறு
கறையுமின்றி சிரிப்பவன்.

அப்பா.
உருவத்திற்கு பின்னிருக்கும் - அவன்
உழைப்புக்கு வடிவம் எது?
உச்சந்தலை நெருப்பு தாங்கும்
ஊதுவத்தி புகைதானது.

அப்பா,
அனுபவங்களின் பாஷையவன்
அடிக்காத மணி ஓசையவன் - உன்
ஆசைகளுக்குத் தெரியாது - பல
அவமானங்களுக்கு வேசியவன்.

உலகில் பல அப்பாக்களின் நினைவில்
கவிதாயினி எழில் விழி.
# மலையாளக் கரையோரம்..... #

பக்கத்து தெருதான், நடக்கிறேன்.
பனையமர்ந்த பச்சைக்கிளியிரண்டு
சாய்ந்த கழுத்துடன் அலகிணைத்து
இணைவதற்கு முன்பான இழைதலில்
துணையுடன் அழகாய் நிர்வாணத்தில்.
வேதங்களின் மூன்றாம் பாவம்
செய்யலாகாதென திரும்பி விட்டேன்.

பக்கத்து ஊருல அத்தைய பாத்தேன்.
அத்த வீட்டு இத்தி மரத்தில
மத்தத போலவே ஒத்த சோடி புறா.
வட்ட கண்ணில் வழிந்த காதலை
சின்ன உறுமலில் சிணுங்கி சொன்னன.
ஒற்றை காலில் ஒருக்களித்து உரசி
நிர்வாண அழகில் நிஜத்தில் கிடந்தன.
வேதங்களின் மூன்றாம் பாவம்
செய்யலாகாதென திரும்பி விட்டேன்.

அத்தானப்பாக்க அடுத்தூரு போனேன்.
முத்தமொண்ணு தருவான்னு
மூச்சு வாங்க நடந்து போனேன்.
பொசு பொசுன்னு ஒரு பொட்ட நாயி
மசுரு நெறஞ்ச மாப்பிள்ள நாயி
நிர்வாணமே அழகாக புணரும் பொழுதில்
வேதங்களின் மூன்றாம் பாவம்
செய்யலாகாதென திரும்பி விட்டேன்.

மலையாள பூமிக்கு மச்சான் போனான்னு
பொண்ணுங்க அழகுல
பொச கெட்டு போவான்னு
மீச வெச்ச எம்மச்சான்
ஆச தீக்க  நாம்போனேன்
பார்த்து தொலச்சிட்டேன்.
பதவிசா புணர்ந்த அந்த
பன்னிங்க கூட பருவத்துல
அழகாத்தான் இருந்தது.
வேதங்களின் மூன்றாம் பாவம்
செய்யலாகாதென திரும்பி விட்டேன்.

நாதன் துணையுடன் கூடும் நாளில்
கோபிகை என்றே மனைவி மார்பில்
மோகனம் பாடும் மோன வேளை
மலையாள மோகினி மயக்கி விடுவாளோ.
மனைவியங்கு மறையும் போதில்
மனிதமுமங்கு மறைந்து போமோ?
நிர்வாணத்தில் இரண்டும் அழகென்றால்
வகைக்கொன்றாய் வரிந்திடுவாயோ?

தலைப்புக்கு தடுமாறினால்
தாய் முடியை மழிப்பாயோ?
தலைப்பொன்று கிடைக்குதென்றால்
தாரத்தின் தாலி அறுப்பாயோ?
நிர்வாணத்தில் நிறமென்ன ?
நிஜத்தில் அதன் பொருளென்ன?
அழகென்ற பொருள் சொல்ல
உனக்கிந்த அவுசாரித்தனமென்ன?

நேசிக்கும் மனிதனுக்கு
தேசம் தாண்டியும் அழகுண்டு.
நாற்றத்தில் இருக்குமுனக்கு
நிலவிலும் அழுக்குண்டு.
நிர்வாணத்தில் அழகென்பது
ஆடை கட்டிய வெளிச்சம்
ஆடைகளில் அழகென்பது
நிர்வாணங்களின் சூன்யம்.

" நீயா ? நானா ? " வுக்கு கண்டனம்.
கவிதாயினி எழில்விழி.
# பெண்ணடிமை போற்றுதும் .........#

விடுமுறை தினமொன்றின்
விடியல் வேளை.
அதிகார தொனியிலொரு
தேநீர் கேட்கிறாய்.
கண் சிவக்க எழுந்த
என்னெதிரே நீ
கையிலொரு குவளை தேநீருடன் .......

அடியே இவளே! போய்க்குளி
வெந்நீர் தயார்,
கையில் பையுடன்
அங்காடி கிளம்புகிறாய்.
எனக்கு தெரியும், நீயும்
வெந்நீர் குளியல்தான்,
போய் வா! சிற்றுண்டி
தயாரிக்கிறேன்.

பொருளாதார உலகத்தில்
பூக்களுக்கும் விலையுண்டு,
அதற்காக, சமையலுக்கான
பூக்களை மட்டுமா வாங்குவது?
முணுமுணுத்தபடியே
குளிர்பெட்டி திறக்கிறேன்.
சமையல் பூக்களிடையே
ஜாதி மல்லியும் இருக்கிறது!

பத்தாகும் போதிலொரு
சிற்றுறக்கம் வந்துவிடும்.
உறக்கம் கலைக்காமல்
துணி பிழிந்து உலர்த்துகிறாய்.
சமையலில் நளனென்று
சான்று தர முடியாது,
நீ சமைத்த உணவில் இன்று
உப்பு சற்று குறைவடா ....!

இருவருக்கும் வேலையில்லை
இன்று முழுதும் உன் தொல்லை.
ஓய்வெடுப்பது யாரென்று
இவருக்கும் எதிர் கவலை .
விவிலியத்தின் ஏழாம் நாளில் தான்
 கடவுளுக்கு கூட ஓய்வு,
வாரத்தின் ஏழாம் நாளில் உலகில்
எனக்கு மட்டுமே ஓய்வு!

எட்டு நாளும் உழைக்கும் கணவன்
கிடைப்பதொரு வரம்.
காதல் என்ற ஒன்றிருந்தால்
கணவன் கூட குழந்தைதான்.
காமம் அங்கு கூட வந்தால்
கணவன் ஒரு கடவுள்தான்.
அனுபவமே பதில் சொல்லும்,
என் பெண்ணடிமை பிழையல்ல.

கவிதாயினி எழில்விழி.
# கவிதை இப்படித்தான் இருக்கணும் #

இயல்பான எண்ணங்களடங்கிய
வண்ண மைக்கூடு ஒன்று.
இயற்கையை நேசிக்கும்
முனையுடன் கூடிய முள் ஒன்று.
எழுதுவுமே எழுத முடியாத வெள்ளை
வண்ண மனக்காகிதம் ஒன்று.
எல்லாமே எழுதக்கூடிய ஏகாந்த
சாய்விருக்கை ஒன்று.
இப்போது இது போதும்
இனிமையாய் ஒரு கவியெழுத.....

வயிற்றை பற்றி எழுதும் போது
பசியோடிருப்பதை மறைக்காதீர்கள்.
உயிரை போற்றி புகழும் போது
அஸ்தியை கரைக்க மறக்காதீர்கள்.
கொதிப்பதைப் பற்றி குறிப்பிடும் போது
எரிவதை பார்த்து எரிச்சல் படாதீர்கள்.
பனித்துளி அழகை ரசிக்கும் போது
‎சூரியன் அழகை பழிக்காதீர்கள்
அறுவடை பற்றி எழுதும் போது
‎கலப்பை கொழுவை மழுக்காதீர்கள்.

சிவனைப் பற்றி எழுதும் போது
சீவனை இழக்க ஒத்துக்கொள்.
கண்ணனைப்பற்றி எழுதும் போது
மீராவின் அழகை ஏற்றுக் கொள்.
அய்யனார் அழகை எழுதும் போது
ஆட்டைக்கொல்ல கற்றுக்கொள்
கலைமகள் பற்றி எழுதும் போது
கல்விப்பெருமையை கவ்விக்கொள்.
கர்த்தரைப் பற்றி எழுதும் போது
கல்வாரி மலையை ஏந்திக்கொள்.

அமைதியைப் பற்றி எழுதும் போதில்
புயல் ஒன்று வருவதை எண்ணிக் கொள்.
கீழே விழுந்து உழலும் போது
நாணல் எழுவதை நினைவில் கொள்.
அடிப்பதைப் பற்றி எழுதும் போதும்
அணைப்பின் சுகத்தை அறிந்து கொள்.
அழகைப் பற்றி எழுதும் போது
ஆபத்தின் வழியில் மறைந்து கொள்.
வரத்தைப்பற்றி எழுதும் போது
சாபமும் சிறந்ததை எழுதிக்கொள்.

குழந்தைப் பற்றி எழுதும் போது
மழலை மொழியை அறிந்து கொள்.
குமரி பற்றி எழுதும் போது
கொஞ்சல் மொழியை புரிந்து கொள்.
காதல் பற்றி எழுதும் போது
வெற்றி தோல்வி உணர்ந்து கொள்.
கலவி பற்றி எழுதும் போது
காமம் பற்றிய அறிவைக்கொள்.
எழுத்து என்பது எண்ணங்களின் வடிகால்
தேங்கிய நீர் அழுக்குதான் அறிந்துகொள்

கவிதாயினி எழில்விழி.
 ‎
# போர்க்களமும் கவிஞனும் *

அதிசய மலரொன்று ஆற்றுக்கு
அந்தப்புரத்தில் இருக்குதென்று - ஒரு
போர் முடிந்த இரவில்
பறித்து வரப்போயிருந்தேன்.

நீருக்கு பதில் ரத்தமும்,
ஈரத்திற்கு பதில் நிணமும்,
இலைகளுக்கு பதில் உறுப்புகளும்,
பூக்களுக்கு பதில் உயிர்களும் ....

தாண்டிப்போய் விட்டேன் - அந்த
தாமரையை பார்த்து விட்டேன்.
அதுவரை அங்கிருந்த அந்தப்புறா
சமாதானம் மறுத்து சமராடியது.

எந்த போரில் வென்று விட்டாய்?
உயிர் தாமரை பதிக்க தகுதி பெற்றாய் ?
என்னை போரில் வெற்றி கொள்,
எனினும் தோல்வியை ஒத்துக் கொள்.

இருவரிடமும் ஏமாளி என்ற
எறிவளை இருந்தது.
பாசத்திடம் போரிட்டு தோற்றோம்.

நம்மிடம் வளமை என்னும்
மனவாளிருந்தும் கூட
வறுமையிடம் தோற்றோம்.

நம்மிடம் முத்தமென்ற
குறுவாள் இருந்தது.
காதல் போரில் தோற்றோம்.

நம்மிடம் மோகனம் என்னும்
கேடயம் இருந்தது
ஊடல்களில் தோற்றோம்.

நோயுடன் போரிட்டு தோற்றோம்.
பாயுடன் போரிட்டு தோற்றோம்.
தாயுடன் போரிட்டு தோற்றோம்.
தனியனாய் போரிட்டு தோற்றோம்.

அடேய் சரவணா .......

வாழ்க்கையென்ற எதிரி படைத்து
இல்லாத ஆயுதமொன்று கொடுத்து
போரிடாமல் நம்மிலுன்னை வென்றானே
அந்த கலைஞனை வரச்சொல்.
போர்க்களம் பற்றி  பிறர் எழுதாத
ஒரு கவிதையெழுத வேண்டும்.

கவிதாயினி எழில் விழி
நீண்ட நாட்களுக்குப் பிறகு
ஒரு சிறு
" அடேய் சரவணா ..... " பதிவு.

மேட்டிலிருந்து பள்ளம்
நோக்கி பாய்கிறாய் !
நீ பாயும் வேகத்தில்
பரிதவித்துதான் போகிறேன்.
பள்ளம் நோக்கி பாய
தயாராகி விட்ட
உன் வேர்வையில் வீசும்
சுகந்தந்தில் சுகமிருக்கிறது.

அபாயகரமான வளைவுகள்
என்று அடையாளமிட்டு நீ
இதழ்களால் நட்டுச்சென்ற
அறிவிப்பு பலகைகளை
திரும்பி வரும்போது
முத்தங்களால் முழுவதும்
அப்புறப்படுத்தி விடு.
அனைவரும் பயணம் செய்ய
நான்
அரசாங்க சாலை அல்ல!
அடேய் சரவணா.....!                                                                           
நான்                                                                                                          உனக்கு மட்டுமேயான
ராஜபாட்டை !!!

கவிதாயினி எழில்விழி.
மஞ்சள் என்பது நிறமல்ல!

நிறங்களில் உனக்கு மட்டும் ஏன்
சிவப்பு பிடிக்கவில்லை?
சிரிக்காமல் சொல்லுகிறாய்,
சிங்காரி வீட்டுக்கு சிவப்புத்தான் அடையாளம்.
அடேய் சண்டாளா!!!
அந்தி சாய்ந்தால் அய்யனார்
கோவிலுக்கும் சிவப்புதான் அடையாளம்
அய்யனார் என்ன ஆண் விபச்சாரியா?

நிறங்களில் உனக்கு மட்டும் ஏன்
பச்சை மட்டுமே பிடிக்கிறது?
சொச்ச முறை கேட்டாலும்
சிரித்தே மறுக்கிறாய் பச்சோந்தியே!!
வெள்ளந்தி பருவங்களில்
வெகுளியாய் இருந்த எனக்கு
விபரம் தெரிந்த இந்த போதுகளில்
’’பச்சை’’யாய் சொல்வதென்றால் – உன்
பச்சையில் எனக்கும் இச்சைதான் போடா!!!

இருட்டுக்குள் நீ விட்டெறிந்த
இற்றுப்போன நிறங்கள் எல்லாம்
வெளிச்சத்தில் நீயென்னை
புரட்டி புரட்டி படிக்கும் போதெல்லாம்
வான வில்லாகி சிரிக்கிறது.
என் கன்னத்தில்சற்றே
சிவப்பாய் நெளிகிறது.

நீல நிற சேலை கட்டும் போதெல்லாம்
நிஜமாகவே எனக்குள் கூடு பாய்கிறாய்.
கருப்பு உள்ளாடைக்குள்
கசங்கிப்போகிறேன்.
கூச்சமாகத்தான் இருக்கிறது.
நீலத்தின் மீது உனக்கென்ன
அத்தனை லயிப்பு?
ஒரே முறைதான் கேட்டேன்.
நீ நீலச்சேலை உடுத்தாத போதெல்லாம்
நிலத்திற்கேதடி உயிர்ப்பு?
நிஜமாகச்சொல்!
நீலமா? கருப்பா?

கருப்பு மட்டும் உனக்கு
ஏனோ வெறுப்பதே இல்லை.
இருட்டுக்குள் ‘ நுழைந்த’ பின்பு
இல்லை வேறு நிறமென்பாய்!
குருட்டு கண்ணணா நீயென்றால்
குறிப்பிட்ட இடத்தில் கிள்ளுவாய்!
ஒத்துக்கொள்கிறேன்.
கறுப்புத்தான் உனக்கும் புடிச்ச கலரு!!

உனக்கு பிடிக்காதென்பதால்
சிவப்பு எனக்கும் பிடிப்பதில்லை.
அடேய் சரவணா……..
இன்று வரை எனக்கு ஒன்று
மட்டும் புரியவே இல்லை!
எனக்கு மிகவும் பிடித்த
‘’மஞ்சள்’’ உனக்கு ஏன்
பிடிக்கவேயில்லை???

மஞ்சளில் விருப்பத்துடன்
கவிதாயினி எழில்விழி>
சாமுத்திரிகா லட்சணம் என்பது……………..

அளவுகள் சரி இல்லையாம்
ஆதங்கப்படுகிறான் சரவணன்.
அங்கலாய்க்கிறான் என் மன்னவன்.
அங்க லட்சண அளவுகள் தெரிந்த
சிற்பி கையில் சிற்றுளி கொடுத்து
சீக்கிரம் அனுப்பு ஆண்டவனே!

அவன் அளைந்து விளையாடிய பின்
அவனோ அல்லது நானோ அள்ளி முடிக்கும்
என் கூந்தலுக்கு ஆறடி நீளம் தேவையில்லை.
நான்கடி மட்டும் இருப்பதே நலம்!

புருவ மத்தி பொட்டுக்கும்
வகிட்டில் வைக்கும் பொட்டுக்கும்
உயர வாக்கில் மூன்றும்
அகல வாக்கில் ஆறும் போதும்
அளவுகள் அங்குலத்தில்…………………
அங்கு அவன் தரும்
இரண்டு முத்தத்துக்கு இந்த இடம் போதும். போதும்.

மூக்குத்தி குத்தினாலும்
 என்  மூக்குக்கும் முத்தமுண்டு.
மூக்குத்தியோடு என் மூக்கும் அடிக்கடி குத்தட்டும்
அதனால் அந்த இடத்தை அதிக கூராக செதுக்கச்சொல்.

கன்னங்களை செதுக்கும் போது  அளவுகளை அதிகமாக்கச்சொல்.
அடிக்கடி கடி வாங்கவும்
அதைவிட முத்தம் வாங்கவும்
போதுமான இடம் வைக்கச்சொல்.
செதுக்கும் போது இரண்டு பக்கமும் சிரிக்கும்போது
குழி விழுமாறு செதுக்கச்சொல்லி சீக்கிரம் ஞாபகப்படுத்து!

உதடுகளைப்பற்றி உனக்கேன் சொல்லவேண்டும்?
அன்பின் அரிச்சுவடி அங்குதானே ஆரம்பிக்கிறது.
காதலின் போது சிரிக்கவும்
காமத்தின் போது சுவைக்கவும்
ஏற்றாற்போல் மேலும் கீழும்
ஏற்ற இறக்கம் வைக்கச்சொல்!

பிறருக்கு கேட்காமல் பின்புறம் கிசுகிசுப்பான்,
சோணைக்கு வலிக்காமல் சோபனம் பாடுவான்.
எனக்கு மட்டுமே கேட்க எந்த அளவு போதுமோ
அந்த அளவுக்கு மட்டுமே அளவாக செதுக்கச்சொல்.
அதிகமாக்கி விட வேண்டாம்.!

நெடுங்கழுத்துக்கும் நெஞ்சு குழிக்கும்
மூவிரண்டு ஆறங்குலத்தை முழுசாக  வைக்கச்சொல்.
முடிந்தபின் மூச்சு வாங்க அங்கேதான்
முகம் புதைப்பான்.

மார்பை செதுக்க நானொரு மந்திரம் சொல்லுகிறேன்.
அளவுகளின் அழகு பற்றி அப்புறம் சொல்லுகிறேன்.
அரங்கத்தில் இருக்கும் போது எனக்கு பிடித்தவாறு
இருபத்தெட்டு இருக்கட்டும்.
அந்தரங்கத்தில் அவனுக்கு பிடித்தவாறு
ஆறங்குலம் அதிகமாக இருக்கட்டும்.
முடியாதென்றால் உன் சிற்பி இத்தோடு முடிக்கட்டும்.

இடைக்கு இருபத்தியாறே அதிகம்தான் என்பேன்.
அங்குல இடைவெளியில் அவனிட்ட முத்தங்கள்
இதுவரை இருபத்தியாறை தாண்டியதேயில்லை.
பிட்டங்களுக்கு அளவெடுக்கும் முன்
முப்பதை மட்டும் முழுசாக வைக்கச்சொல். போதும்
அதிகமானால் அடிக்கடி மத்தளம் வாசிப்பான்.

பாசத்தில் அவன்  படுக்கும்  போது
நான் பாயாக வேண்டும்.
என் முன்தொடை இரண்டிலும் அவன் படுக்குமளவுக்கு இடம் ஒதுக்கு.
இதெல்லாம் முடித்துவிட்டு உளியை
என்னிடம் கொடுத்துவிட்டு
உன் சிற்பியை ஓடி விடச்சொல்.
அவனுக்கான அந்தரங்கத்தை செதுக்க
அவனையே வரச்சொல்லி இருக்கிறேன்.

சிற்றுளி பறித்தான். சித்திர வேலைப்பாட்டுடன்
சிற்சபை செதுக்கி முடித்தான்.
இப்போது உளி என் கையில்.!
அடேய் சரவணா……….
ஒழுங்காக செதுக்க வேண்டும்
உனக்கான அளவு சொல்!!

எனக்கான உன்னளவை ஒழுங்காக செதுக்கிக்கொண்டேன்.
உனக்கான என்னளவை ஒழுங்காக செதுக்கிக்கொள்!
சிரித்தான்! சிலிர்த்தேன்!!
தட்டி எழுப்பி விட்டான்! தடுமாறி விழித்துக்கொண்டேன்.

கனவுகளுடன் கவிதாயினி!