திங்கள், 28 ஆகஸ்ட், 2017

# அதையும் நீயே தா சாமி #

உன் வரவுக்கு பின்னர்தான்
வர்ணங்களற்ற எங்கள் வானவில்
தனக்குள் ஆயிரம் வர்ணங்கள்
உண்டென்பதை அறிவித்துக்கொண்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
மெளனங்களால் மட்டுமே எழுதப்பட்ட
எங்கள் கவிதைகள் தமிழால் தங்களை
அலங்கரித்துக்கொண்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
அன்பென்ற உணர்வுக்கு
அன்புதான் பண்டமாற்று
என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உன் வரவுக்கு பின்னர்தான்
எங்கள் விடியல்களை
சூரியன் வந்து தொட  மறுத்தது
நிலவே வந்து தொடங்கி வைத்தது.

உன் வரவுக்கு பின்னர்தான்
 வார்த்தைகளுக்கு வர்ணம் பூசும்
 வாமன வித்தை எங்களுக்கு
 வசமாகிப்போனது.

உன் வரவுக்கு பின்னர்தான்
வாழ்க்கைச் சாரல்களில் நனைந்த
பட்டாம்பூச்சிகள் விலகிக்கொண்டது
எங்கள் விலாவில்இறக்கை முளைத்தது.

உன் வரவுக்கு பின்னர்தான்
அன்புக்கு கோபத்தையும்
கோபத்துக்கு அன்பையும்
கேடயமாக்க கற்றுக்கொண்டோம்.

உன் வரவுக்கு பின்னர்தான்
பிறப்பென்ற வார்த்தைக்கு
உன் பிறப்பே பொருளென்று
பிரம்மன் இன்று சொல்லிச்சென்றான்.

உன் வரவுக்கு பின்னர்தான்
தென்றல் எங்கள் வாசல் வந்து
இன்றுதான்  நீ பிறந்தாய்
தினமும் தினமும் சொல்கிறது.

உன் வரவே எங்களுக்கு வரமாகி
போனதென்றால் அதை தந்த நீ சாமி!
உன் உருவே எங்களுக்கு உறவாகி
போகுமென்றால்
அதையும் நீயே தா சாமி!!

அன்பு மகளுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூறுவதில் மகிழ்வது
கவிதாயினி எழில்விழி, சண்முகநாதன், சுலோச்சனா கருப்பசாமி,
சுசீந்திரகுமாரி,
எழில் ஆதித்தன்,
மற்றும்
மைக்கேல்ராஜ், ஸாம், ஏஞ்சல்,
பெற்றோர், பெரியோர்,
கற்றோர், மற்றோர்,
உற்றார், உறவினர்களுடன்
மாறாத நட்புடையோர்.
# எனக்கும் உனக்கும் ஒரே ஆசை #

எனக்கான விடியல்களுக்கு
உன்னை சூரியனாக வேண்டுகிறேன்.
நீயோ நிலவாகி விடுகிறாய்.
அதனால் எனக்கு
இரவுகளே பிடித்துப் போனது.

எனக்கான உடைகளுக்கு
உன்னை கொக்கிகளாக வேண்டுகிறேன்.
நீயோ நூலாகி விடுகிறாய்.
கொக்கிகள் அப்படியே இருந்தாலும்
நூல் பிரிவதே எனக்கும் பிடிக்கிறது.

எனக்கான இரவுகளுக்கு
உன்னை இசையாக வேண்டுகிறேன்.
நீயோ மோகனம் மட்டுமே இசைக்கிறாய். முத்தத்திலும் உன் மோகனம் கேட்பதால்
சத்தம் இல்லாமலும் கேட்கப் பிடிக்கிறது.

எனக்கான குளியல்களுக்கு
உன்னை மஞ்சளாக வேண்டுகிறேன்.
நீயோ தண்ணீராகி விடுகிறாய்.
ஆடையோடு குளித்து நான் தோற்கிறேன்
ஆடைக்குள் நுழைந்து நீ ஜெயிக்கிறாய்.

எனக்கான உன் மூச்சை
முந்தானையில் முடிந்திருக்கிறேன்
மூச்சு முட்டுவதாய் கூறி
முடிச்சவிழ்ப்பதாய் கெஞ்சுகிறாய்.
பிரியும் போது தான் தெரிகிறது
நீ முந்தானையை அவிழ்த்திருக்கிறாய்.

உன்னால் மட்டும்  எப்படி முடிகிறது.
எங்கப்பனுக்கு யாரோவாய்,
எங்கம்மாவுக்கு வேலையாளாய்
என் தம்பிக்கு நட்பாய்
எனக்கு மட்டும் இருளிலும் நிழலாய்.

அடேய் சரவணா .....
எனக்கான ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு ஆசை சொல்கிறேன்.
நீயோ உன்னாசை சொல்கிறாய்.
ஒத்துக் கொள்வதாய் நடிக்கிறேன்.
ஒன்று தெரியுமா?
உண்மையில் நான் தான் ஜெயிக்கிறேன்.

முடிவில் தோற்றுவிட்ட
கவிதாயினி எழில்விழி
# வித்தை #

யோசித்து பார்க்கிறேன்.
வித்தையின் மூலம் எது ?

உயிர்ப்பின் உரம் அது.
உண்மையில் வரம் அது.
நதி மூல, ரிஷி மூல
விளக்கங்களின் விளக்கம் அது.

ஒத்தை வழி போனாலும்
வித்தை வழி போய்ப் பார்.
அத்தை மாமன் உறவு கூட
வித்தை சொல்லும் விந்தை பார்.

தத்தைக்கும் வித்தையுண்டு
மெத்தையில் அது மெத்த உண்டு.  
 சித்திரத்தில் பொய் எழுதி
சரித்திரத்தை சரித்ததுண்டு.

வித்தையில்லா உயிர் என்பது
நத்தையில்லா கூடு போலும்.
வாழும் நாள் முடியும் வரை
வாழவைக்கும் உயிர் போலும்.

காதலுக்கும் வித்தையுண்டு.
கட்டில் காமத்திற்கு வித்தையுண்டு.
வீரத்திற்கும் வித்தையுண்டு
பத்ம வீயூகத்திற்கும் வித்தையுண்டு.

பாம்புக்கும் வித்தையுண்டு
பாவியந்த பல்லிக்கும் வித்தையுண்டு.
குழந்தைக்கும் வித்தையுண்டு
கொடுக்குள்ள குழவிக்கும் வித்தையுண்டு.

மானுக்கும் வித்தையுண்டு
தோகை மயிலுக்கும் வித்தையுண்டு.
மீனுக்கும் வித்தை யுண்டு.
வேட்டை ஆடுவதற்கும் அதுவுண்டு.

வித்தையில்லா வாழ்வென்பது
சத்தியமாய் பாழானது.
வித்தையோடு போவதென்பது
பத்தியத்தில் தேனானது.

என்னிடமும் வித்தையுண்டு
அத்தை மகன் உன்னிடமும் அதுவுண்டு
சுத்தி சுத்தி வந்து என்னை
சுத்த வைக்கும் காதல் அது.

அடேய் சரவணா.......
எல்லோருக்கும் வித்தை உண்டு.
உனக்கு மட்டும் மெத்த வுண்டு.
முத்தத்தில் வித்தை காட்டி
மோகத்தில் வித்தை காட்டி
பார்வையில் வித்தை காட்டி
வேர்வையில் வீழ்த்தி விட்டாய்.

வித்தை என்பது வரமானால்
அதை எனக்கு தந்த நீ சாமி!
வித்தை என்பது சாபமானால்
அதையும் நீயே தா சாமி!!

வித்தையில் மகிழ்வுடன்
கவிதாயினி எழில்விழி.
# என்னை யாருக்கும் பிடிப்பதில்லை. #

காரணம் எனக்கும் தெரியும்.
உன் குரலிலும் பேசுவேனாம்,
ஊரைச்சுற்றி திரிவேனாம்,
தூண்டில் போட்டு பாம்பு பிடிப்பேனாம்,
ஊர் மரமேறி இளனி குடிப்பேனாம்,
மான் கொம்பு சுழற்றுவேனாம்,
மாமன் மகனை அடிப்பேனாம்,
அற்றைத்திங்களற்ற அமாவாசையில்
அடிவயிற்றை கிழித்து பிறந்தேனாம்.
என்னை யாருக்கும் பிடிப்பதில்லை.

உன்னை எல்லோருக்கும் பிடிக்குமாம்
என்னிடமே பட்டியலிடுகிறார்கள்.

எங்காத்தாவுக்கும் ஒங்காத்தாவுக்கும்
இரண்டு சொம நாத்துக்கட்டு
இளைய கோனார் வயல் வரைக்கும்
எசப்பாட்டும் இளஞ்சிரிப்புமாய்
சுமந்து கொண்டு சேர்த்தாயாம்.
அடியே மாமியாளே,
அயினி தேய்க்கறப்போ
சண்ட வருமில்ல
அன்னிக்கு வச்சிக்கறேன்டி
உங்க இரண்டு பேர்த்தயும்.

சுருட்டுக்கட்டும் சுருள் புகையிலையும் எங்கப்பனுக்கு பிடிக்குமென்பது
என்னையடுத்து உனக்கும்
தெரிந்திருக்கிறது.
யோவ் மாமனாரே,
சம்மந்தி சண்ட வரப்ப சொல்லு
நான் உம் பக்கம் சேந்துக்கறேன்.

குரங்கு பெடல் சைக்கிளை ஒட்ட
எந்தம்பிக்கு சொல்லிக் குடுத்து
பாராட்டு பத்திரம் வாசித்து
என்னைவிட்டு அவனை விரட்டியது
ஏனோ அவனுக்கு பிடிக்கிறது.
வீட்டுக்கு வாடா
குரங்கு பெடல் போட்ட கால
குரங்கு காலாக்கிடறேன்.

என் வீட்டு செவலை இரண்டும்
ஓர் நாள் இரவல் வாங்கினாய்,
அய்யர் வயல் வரைக்கும்
உழவு நுகத்தை நீ சுமந்து
மேய்ச்சலிலேயே ஓட்டி போனாயாம்.
அசை போடும் சாக்கில்
அளவளாவிக் கொண்டிருக்கிறது.
புண்ணாக்கு தண்ணில
புளிய கரைச்சு ஊத்தரேன்
வாங்கடியேய் காளைகளா !

அழகரசன் டீக்கடையில்
அக்கவுன்டில் ரொட்டி வாங்கி
அன்னாடம் கோவில் நாய்க்கு
கொண்டு வந்து கொடுப்பாயாம்.
மீன் முள்ளு கலந்த சோத்துக்கு
உறுமி குலைக்கும் சாக்கில்
என்னிடமே சொல்கிறது.
என் வீட்டு ஜிம்மி
அடி செருப்பால நாயே!

ஆத்துமீனுக்கும் ஒன்ன பிடிக்குதாம்.
என்ன கடிச்ச வாயோட
ஒன்ன வந்து கடிக்கச் சொல்லி
கத்துக்குடுத்திருக்கியாம்ல.
அன்னன்னிக்கு சாயங்காலம்
அரிச்சி புடிச்சி அவிச்சி திங்கறேன்.
அடுத்த நாளும் கடிக்கும் மீனுக்கு
பாடம் நடத்தும் பாசக்காரா
பாவம் மீனு. பாடத்த மாத்து.

அடேய் சரவணா .............
பிரியங்களால் பிடித்து வைத்து
பிரியாமல் நடத்தி வைத்து
புரியாமல் நடந்து கொள்ளும்
புதிரான மனசுக்காரா,
நீயிருக்கும் மனசுக்கு உன்னப் போலவே
ஊர் மரத்து இளனி பிடிக்குது.
ஊந்து போகும் பாம்பு புடிக்குது.
மான் கொம்பு புடிக்குது - வருங்கால
மாமம் மகன் ஒன்னயும் பிடிக்குது.
ஆனால்
என்னை யாருக்கும் பிடிப்பதில்லை.
ஆமாம்
உன்னைத் தவிர............!!
# எடுத்துப்போ ....... #

வேட்டைக்காரன் நீ.
நாய் இல்லையென்று நடிக்க வேண்டாம்.
வேட்டையாடி கொண்டு வா
விறகும் கொஞ்சம் கொண்டு வா
ஆக்கி அவித்து தருகிறேன்
போதாது என்று சொல் -
போர்வைக்குள்   வந்து உன்
மீதப்பசி தீர்க்கிறேன்.
விடிவதற்குள் விடுவதென்றால்
இன்றும் என்னை எடுத்துப்போ.

குடுகுடுப்பைக் காரன் நீ
ஜக்கம்மா வாக்கென்று
ஜல்லியடிக்க வேண்டாம்
உங்கம்மாவை சம்மதிக்க வை.
எங்கம்மாவை என்னிடம் விடு.
ஜக்கம்மா வாக்கெல்லாம்
நானே சொல்கிறேன்.
பலிப்பவர்கள் பிழைக்கட்டும்.
என் காதல் வாக்கு பிழையானால்
என்னை உன்னுடனேயே எடுத்துப்போ.

கரடிக்காரன் நீ
உன் கரம் பற்றிய கரடி நான்
இடையில் மரமிருப்பதாய் சொல்லி
இந்த இடறி விழும் நடிப்பெல்லாம்
என்னிடத்தில் வேண்டாம்.
தேன் தானே வேண்டும்
இந்தா,
இதழ்.
ஊசி குத்தும் வேலை வேண்டாம்
இதழ் உறிஞ்சி எடுத்துப்போ.

பாம்பாட்டி நீ
ராஜநாகம் நான்
மகுடி ஊதி பிடிப்பதாய்
என்னிடத்தில் நடிக்க வேண்டாம்
எனக்கு செவி உண்டு
எனக்கும் ஊத தெரியும்
உன் கழுத்தைக் கொடு
பிடித்துக் கொள்கிறேன்.
நீலகண்டன் மகன் தானே நீ ,
அடேய் சரவணா ..............
என் செவியோரம் உன் இதழுரசி
என் விஷம் முழுதும் எடுத்துப்போ.

விஷமில்லா ராஜநாகமாகி
கவிதாயினி எழில்விழி.
# பிரிவு #

பிரியாத வரம் வேண்டி
பிரியங்கள் பாடுகிறாய்.
பிரிவென்பது இயல்பு.
பிரிவென்பது புரிதல்

ஒன்றுக்குள் ஒன்றாதல்
புரிதலின் இறப்பு .!
ஒன்றில் வேறாதல்
தத்துவமாய் சிறப்பு.!

பிரிதலின் புனிதத்தில்
புரிதல்கள் வாழும்.!
புரிந்தவர்கள் பிரிவதில்லை
பூமியில் இது சாபம்!

பிரிதலில் மகிழ்ச்சி கொள்.
புரிகிறதா பூவே,
பூப்பவை எல்லாம்
பூஜைக்கு போய் சேர்வதில்லை.

மண்ணை விட்டு நீர் பிரிதல் ஆறு
மண்ணை விட்டு நீர் பிரிதல் ஆவி
மண்ணை விட்டு நீர் பிரிதல் வரம்
மீண்டும் மண்ணுக்கே வருவது புரிதல்.

அடேய் சரவணா .......
மண்ணுக்கும் நீருக்குமே
பிரிதலும் புரிதலும்
இயல்பானது என்றான போது
உனக்கும் எனக்கும் எப்படி வேறாகும்?

ஏனென்றால்,
புரிதல் என்பது பூசாரி !
பிரிதல் என்பதே கடவுள்...!!

வணங்குகிறாள் கவிதாயினி .
நண்பர் Shanmuga அவர்களுக்கு பிறந்த நாள்.

# இந்த நாள் இனிய நாள் #

அறிமுகங்களால் அறிமுகம்
ஆகும் இந்த உலகில்
அனுபவங்களால் அறிமுகம்
ஆவதே இந்த வாழ்க்கை.

எதை யார் யாருக்கு அறிமுகம் செய்வார்?
காதலுக்கு அறிமுகம் உண்டு.
காமத்திற்கும் அறிமுகம் உண்டு
நட்புக்கும் அறிமுகம் உண்டு.
துரோகத்துக்கும் அறிமுகம் உண்டு.
பிறப்புக்கும் அறிமுகம் உண்டு
அவ்வளவு ஏன்?
இறப்புக்கும் அறிமுகம் உண்டு. -அதில் -
அனுபவங்களின் அறிமுகம் உண்டு.

இனி,
அறிமுகம் இல்லாதது ?
கடவுளை அறிமுகம் செய்து வையேன்.
அனுபவம் என்னை கேட்டது.
அப்பனை அறிமுகம் செய்து வையேன்.
அநாதை குழந்தை அம்மாவை கேட்டது.

இரண்டுமே இல்லை என்று போவதில்லை.
அனுபவங்களே கூட இங்கே தோற்கும்.
அங்கேயும் வந்து ஒரு வார்த்தை
தோள் தட்டி நிமிர வைக்கும்
வார்த்தைகளில் வானம் வளைக்கும் அந்த
சொற்களின் சூத்திரதாரி நீ.

வார்த்தைகளால் வசீகரிக்கும்
வாமன யுக்தி உன் தந்தம்
அதில் உருவாக்கிக் கொண்டாய்
நீ சில சொந்தம்
உன் ஆலாபனைகளுக்கு ராகம்
தரும் அந்த சந்தம்
ஆண்டாண்டு காலம் கடந்தும்
எமை ஆளுமந்த பந்தம் .

நீ
இந்திரனல்ல, சந்திரனல்ல,
அருணனுமல்ல, வருணனுமல்ல,
வெளிச்சமல்ல இருளுமல்ல
காலையல்ல மாலையல்ல
ஆணல்ல,  பெண்ணுமல்ல
குணத்தால் அர்த்தநாரி நீ
ஆமாம் எங்கள் வம்சங்களுக்கு
நீ அன்பில் தாயானாயய்
அறிவில் தந்தையானாய்.

அப்படியானால் எங்களுக்கு ……….
தாயறியாத சூல் நீ
அதை
தரணியில் சொல்ல வந்த
தங்கமே நீ வாழி

யெம் யெஸ் வீ யி
Michal Sudha
Sulochana Karuppusamy

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சனி, 5 ஆகஸ்ட், 2017

# மாறி விட்டார்கள் #

தேன்மொழிகளும் செல்விகளும்
பூங்கொடிகளும் எழிலரசிகளும்
இல்லாத கிராமங்களில்
இன்று சரவணன்கள் மட்டுமே
கணணிகளில் காதலிக்கிறார்கள்.
கண் விழித்தே தூங்குகிறார்கள்.

தேன்மொழியை தேடாதீர்கள்
அவள் பெயர் இப்போது தேவதை.
ஒப்பனையில் வாழும் அந்த தேவதைக்கு
இப்போது குளிச்சசடை போட கேசமில்லை.
அள்ளி முடிக்க கூந்தலில்லை.
போனி டெய்ல் கொண்டையோடு
ஸ்கூட்டியில் விரைகிறாள்.
சரவணன் தி கிரேட் ஐ காதலிக்கிறாளாம்.
சரவணன் ஓட்டிய மாட்டு வண்டி
தேன்மொழி கழற்றி சுற்றிய
மல்லிகை சரத்துடன்
காதலின் தகனத்தில்
எரிந்து கொண்டிருக்கிறது.

செல்விகளை தேடாதீர்கள்
சரவணன் காதலுக்காய் சாட்டையடி பட்ட
செல்விகள் இப்போது ஏழைகள் இல்லை
சாயம் பூசிய தலையும் உதடுகளும்
சர்க்கஸ் காரனாக்கி விட்ட கோலத்துடன்
ஆக்டிவாவில் அலையும் அவளை
பல்சரில் தொடரகிறான்
அந்த பரட்டைத்தலை சரவணன்
லோடு கேரியர் சைக்கிளில்
உட்கார்ந்து வந்த செல்விகளின் பிட்டங்களிலும்
சைக்கிள் மிதித்த சரவணன்கள் கால்களிலும்
அந்த தழும்புகள் மறைந்து விட்டன.

பூங்கொடிகளை தேடாதீர்கள்.
புதுமைப்பெண்களாகி விட்டார்கள்.
ஆன்டிராய்ட் போனுடன் அலையும்
அவர்களிடம் சற்று ஆண்மையும்
கலந்திருப்பதாய் தெரிகிறதாம்,
தன் ஃபாரின் பைக் பயணத்தில் அவளை
முதுகில் சாய்த்தபடி பயணிக்கும்
அந்த ஸ்பைக் தலை சரவணன்களுக்கு.
காற்றில் தூக்கும் தாவணி தடுக்க
ஆறு இடங்களில் பூங்கொடிகள் குத்திய
அந்த சேஃப்டி பின்கள் துருப்பிடித்து விட்டன.
தொடை தெரிய தூக்கிய கட்டிய
சரவணன்களின் லுங்கிகள்
சாயமிழந்து கிழிந்து தொங்குகின்றன.

எழிலரசிகளும் மாறித்தான் விட்டார்கள்.
தலை விரித்து நுனி முடிச்சு இடுவதில்லை.
முழம்பூச்சரம்  முடிவதில்லை.
அப்போது  போல் இல்லாமல் இப்போதெல்லாம்
மாராப்பில் கவனம் வைக்கிறார்கள்.
மாலையிலும் குளிக்கிறார்கள்.
மாவிளக்கு ஏற்றுகிறார்கள்.
வருடத்தில் ஒரு நாள் ஊருக்கு உணவிடுகிறார்கள்.
மாதத்தின் முப்பதாம் நாளில்
சரவணன்கள் சமாதிக்கு
பூக்களுடன் போகிறார்கள்.

பூக்கூடையுடன் போகிறாள்
கவிதாயினி எழில்விழி.
#    முத்தம்.   #

கேட்டு கொடுத்தால் சத்தம்
கேட்காது கொடுத்தால் யுத்தம்.
நான் கொடுத்தால் தோல்வி
நானும் கொடுத்தால் வெற்றி.

முத்தத்தில் வந்த நாணம்
மொத்தத்தில் வந்தால் காணோம்
வந்தால் தருவேன் முத்தம் _  அதில்
வருமே சின்ன சத்தம்.

முத்தமோ ஒரு வசந்தம் - அதன்
சத்தமோ சிறு  சுகந்தம் _ வரும்
சித்தத்திலோ பெரும் மயக்கம் - வந்தால்
சிநேகத்திலே மூழ்கி முயக்கம்.

முத்தம் ஒரு வண்ணாத்திப்பூச்சி.
தராதவர் தந்தால் அழகிய கண்ணாமூச்சி.
கிடைக்காத பொழுது அத்திப்பழம். _ அவனிடம்
கிடைக்கும் போது மட்டும் பலாப்பழம்.

# முதல்ல ஷேவ் பண்ணிட்டு வாடா #
#  தாம்பத்யம் #

உறவுகளால்  உருவாக்கப்படும் ஒரு
உருவமில்லா கோவில்,
கற்சிலைக்கும் பொற்சிலைக்கும்
காலம் தோறும் மோதல்.

வெற்றியே தோல்வியென்னும்
சமன்பாடு சரியாகும்.
வெற்றிகளே வெற்றியென்னும்
சூத்திரங்கள் சுகமாகும்.

ஆத்திரத்தில் போட்டியிட்டால்
அந்தரங்கம் அழுக்காகும்.
சூத்திரங்கள் புரிந்து கொண்டால்
சொர்க்கமே வாழ்வாகும்.

மோகமும் ஆசையும் முப்போகமல்ல.
முப்பதும் அறுபதும் நாட்களுமல்ல.
பூச்சூடிய வாசமும் புன்னகை உதடுகளும்
அறுபதை தாண்டி தொடர்வதே அழகாகும்.

ஆண்கள் ஆவேசமும் பெண்கள் ஆக்ரோசமும்
அடங்கிப்போகும் விசயமல்ல.
ஒருவருக்கொருவரால் அடக்கப்பட வேண்டிய
அது ஒரு அழகிய நாகத்தின் விசம் .

வீங்கிய முலைகளும் வியர்த்த வயிறும்
துடைக்கு முன்பு சாய்தலே சுகம்.
உடம்புகளால் துடைப்பதொன்றே
அவரவர்க்கு இதம்.

புரிதலின் நெருக்கத்தில் பூக்களின் வாசம்
கசக்கி முகர்தலில் வருவதில்லை மோகம்.
மூடிய அறைக்குள் முழுவதும் சொந்தம்
திறந்த பின்பும் இனிதாக தொடருமந்த பந்தம்.

புரிந்து கொள்ளுங்கள்.
முதல் உறவிலல்ல.
முதலிரவின் வெற்றியில்
முக்கனியும் தோற்கும்.
அன்றைய தினத்தில்
பெண்களின் தோல்வி
ஆண்களுக்கு நரகம்.
ஆண்களின் தோல்வி
பெண்களுக்கு ரணம்.

வெற்றிகளுடன்
கவிதாயினி எழில்விழி.
# திண்ணையும் வேர்களும். #

திண்ணை.

நாலு கட்டு வீட்டுக்குள்ளும்
நாலு வேலி வீட்டுக்கு வெளியிலும்
நீண்டிருந்த மனங்களின் சாய்விருக்கை.
அருகிருக்கும் ஆலின், வேம்பின்
நிழல்களின் ஓய்விருக்கை.
வெட்டுப்பட மாட்டோம் என்ற அதன்
வேர்களின் நம்பிக்கை.

பார்க்காத பஞ்சாயத்து கிடையாது
என் வீட்டு திண்ணை.
தீராத பஞ்சாயத்தும் கிடையாது
என்பது அதன் பெருமை.
இன்றைய பஞ்சாயத்து  இது வரை
இல்லாத கொடுமை.
ஆரம்பிக்கட்டும். ஆரம்பிக்கட்டும்.

கோலம் முடித்த கையோடு திண்ணையில்
பாய் விரித்து விட்டேன்
கோலப் பொடி துடைக்காத கையோடு
ஒருக்களித்து படுத்தும் விட்டேன்.
வசனங்களுக்கு காதையும்
கிள்ளலுக்கு கன்னத்தையும் தவிர
மீதமெல்லாம் மூடிக்கொண்டேன்.

“ என்னடி ஆச்சு உனக்கு “ கன்னம் தொட்டு
சிரித்து கன்னம் கிள்ளிப் போகிறாள்
காரணம் தெரிந்த மதினி மாராயி.
துடைப்பம் எடுக்க வந்த எங்காத்தா இருளாயி
இரண்டு மாத்து மாத்திட்டு போறா
எனக்கு இரண்டு எறும்புதான் கடிச்சது.

உள்ளங்கால் கிள்ளுனது தெரியாமலா போகும்
கண்ணு திறக்காமலே “ போடா “ சொன்னதுக்கும்
சிரித்தே செல்கிறான் மாமன் மகன் மருதமுத்து .
அய்யோ! அங்காயி கெளவி வராளே,
குனிஞ்சி மூக்கு நுனி மோந்து பாத்து
சனியன். பயமுறுத்திட்டாளே ன்னு
குண்டிய கிள்ளிபோகுது அந்த சனியன்.

பக்கம் அமர்ந்து என் இமை வலிந்து விலக்கி
ஆளக்காணாமே என்று சிரித்து அடி வாங்கி எழுந்து போகிறாள் சித்தி மவ சித்திராங்கி.
மாடு பட்டி திறக்க வந்த மாட்டுத்தாத்தா
பக்கம் வருவதற்குள், கை சைகை பார்த்து விட்டு
நடத்துடி “கண்டா…….. “ திட்டிச் செல்கிறார்.
போய்யா, போய்யா, பாட்டிகிட்ட சொல்லிராத!

திறந்து விட்ட பட்டி மாடுகளும் வந்து
கால் நக்கி கெளம்பியாச்சி.
அப்பன வரச் சொல்றேன்னுட்டு
ஆத்தாளும் கெளம்பியாச்சி.
களைபறிக்க வாடின்னுட்டு
கருப்பாயியும் கெளம்பியாச்சு.

பொழுது விடிஞ்சிடுச்சி புரண்டும் படுத்தாச்சி.
கண்ணு கூசுமுன்னு காதை திறந்தாச்சு
ஆனா, வாசத்துலயும் வருவான்னு
மூக்குக்கு மட்டும் தான் தெரிந்சிருக்கு.
சீக்கிரம்  கன்னம் கிள்ளிப் போடா - நான்
கண்ண தொறக்கணும் கஞ்சியும் குடிக்கணும்

கன்னமும் கிள்ளாம, கழுத்துக் குழி தடவாம
இடுப்புப் பள்ளம் தடவி, இளநெஞ்சி கிள்ளி
பஞ்சாயத்த முடிச்சி வச்சிட்டு
பாக்காமா போறியே பாசக்கார சரவணா.......
என் பருவத்திண்ணையை இன்று முதல்
உன்பார்வையின் வேர்கள் தாங்கட்டும்.
நான் சுருட்டிச் செல்லும் பாயையும்
தூக்கிச் செல்லும்  தலையணையும்  மீண்டும்
உன் வியர்வையின் வேர்களே
விரித்துக் கொள்ளட்டும்.

காத்திருக்கும்
கவிதாயினி எழில்விழி.
# சிறுமை கண்டு பொங்குவாய் #

(சூரியன் FM ல் வைரமுத்து அவர்கள் பிறந்த நாள் கவிதைப்போட்டிக்காக அனுப்பியது)

ஏ பாரதி ………..!
நீ வேறு "வா வா வா “ என்று அழைக்கிறாய்.
ஏறு போல் நடையினாய் வந்து விட்டோம்.
சிறுமையும் கண்டு விட்டோம் - ஆனால்
பொங்குவதுதான் எப்படியென்று புரியவில்லை.
சொல்லிச்சென்றிருக்கலாம் நீ !

வெண்மணிக்கும் பொங்கினோம்.
வேம்புக்கும் பொங்கினோம்.
மரபணு மாற்றம் மறுத்து
மாட்டுக்கும் பொங்கினோம்.

மாஞ்சோலைக்கும் பொங்கினோம்.
மாங்காய்க்கும் பொங்கினோம்.
நீதிக்கும் பொங்கினோம்.
நீதி மறுத்தும் பொங்கினோம்.

கச்சத்தீவு கடலுக்கும் பொங்கினோம்.
வாய்க்காலுக்கும் பொங்கினோம்.
நிர்பயாவுக்கும் பொங்கினோம்.
நந்தினிக்கும் பொங்கினோம்.

காதலுக்கும் பொங்கினோம்.
காமத்திற்கும் பொங்கினோம்.
கல்விக்கும் பொங்கினோம்.
கழிவறைக்கும் பொங்கினோம்.

லட்சியத்திற்கு பொங்கினோம்.
லஞ்சத்திற்கும் பொங்கினோம்.
ஆடையில் சிறிதென்றாலும் - அந்த
கோவணத்திற்கும் பொங்கினோம்.

முடிவில்
வயிற்றுக்கும் பொங்கினோம்
தின்று விட்டு தூங்கினோம்.

இனி, பாரதி ……….!
உன் மற்றுமொரு வரிக்காக
நாங்கள் பொங்க வேண்டும்.
அந்த நாள் அகிலத்தை
அப்படியே புரட்டிப்போடும்.
மெல்லத்தமிழினிச்சாகும்
நாள் நெருங்குகிறது.

அறம் பாடிய புலவர்கள் போய் விட்டார்கள்.
இன்று மறம் பாடும் புலவன் இருக்கிறான்.
" தமிழுக்கும் நிறம் உண்டு “ என்றவனவன்.
சிவப்பா? பச்சையா? வெள்ளையா?
என்பதைச்சொல்ல வில்லை.

" இன்னொரு தேசிய கீதம் "
எழுத்திலே வடித்தவன் அவன்.
தமிழுக்காக மற்றுமொரு தேசிய கீதம்
எழுதுவானவன்

அந்த கீதம் இசைக்கப்படும்  நாளில்
எங்கள்  கன்னித்தமிழின்  வாழ்நாளில்
இன்னும் சில யுகங்கள்  கூடும்.
எனவே,
அவனும், என் தமிழும் நீடூழி வாழி ……!!

கவிதாயினி எழில்விழி.
நண்பர் Shanmuga அவர்களுக்கு பிறந்த நாள்.

# இந்த நாள் இனிய நாள் #

அறிமுகங்களால் அறிமுகம்
ஆகும் இந்த உலகில்
அனுபவங்களால் அறிமுகம்
ஆவதே இந்த வாழ்க்கை.

எதை யார் யாருக்கு அறிமுகம் செய்வார்?
காதலுக்கு அறிமுகம் உண்டு.
காமத்திற்கும் அறிமுகம் உண்டு
நட்புக்கும் அறிமுகம் உண்டு.
துரோகத்துக்கும் அறிமுகம் உண்டு.
பிறப்புக்கும் அறிமுகம் உண்டு
அவ்வளவு ஏன்?
இறப்புக்கும் அறிமுகம் உண்டு. -அதில் -
அனுபவங்களின் அறிமுகம் உண்டு.

இனி,
அறிமுகம் இல்லாதது ?
கடவுளை அறிமுகம் செய்து வையேன்.
அனுபவம் என்னை கேட்டது.
அப்பனை அறிமுகம் செய்து வையேன்.
அநாதை குழந்தை அம்மாவை கேட்டது.

இரண்டுமே இல்லை என்று போவதில்லை.
அனுபவங்களே கூட இங்கே தோற்கும்.
அங்கேயும் வந்து ஒரு வார்த்தை
தோள் தட்டி நிமிர வைக்கும்
வார்த்தைகளில் வானம் வளைக்கும் அந்த
சொற்களின் சூத்திரதாரி நீ.

வார்த்தைகளால் வசீகரிக்கும்
வாமன யுக்தி உன் தந்தம்
அதில் உருவாக்கிக் கொண்டாய்
நீ சில சொந்தம்
உன் ஆலாபனைகளுக்கு ராகம்
தரும் அந்த சந்தம்
ஆண்டாண்டு காலம் கடந்தும்
எமை ஆளுமந்த பந்தம் .

நீ
இந்திரனல்ல, சந்திரனல்ல,
அருணனுமல்ல, வருணனுமல்ல,
வெளிச்சமல்ல இருளுமல்ல
காலையல்ல மாலையல்ல
ஆணல்ல,  பெண்ணுமல்ல
குணத்தால் அர்த்தநாரி நீ
ஆமாம் எங்கள் வம்சங்களுக்கு
நீ அன்பில் தாயானாயய்
அறிவில் தந்தையானாய்.

அப்படியானால் எங்களுக்கு ……….
தாயறியாத சூல் நீ
அதை
தரணியில் சொல்ல வந்த
தங்கமே நீ வாழி

யெம் யெஸ் வீ யி
Michal Sudha
Sulochana Karuppusamy

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
# பிரிவு #

பிரியாத வரம் வேண்டி
பிரியங்கள் பாடுகிறாய்.
பிரிவென்பது இயல்பு.
பிரிவென்பது புரிதல்

ஒன்றுக்குள் ஒன்றாதல்
புரிதலின் இறப்பு .!
ஒன்றில் வேறாதல்
தத்துவமாய் சிறப்பு.!

பிரிதலின் புனிதத்தில்
புரிதல்கள் வாழும்.!
புரிந்தவர்கள் பிரிவதில்லை
பூமியில் இது சாபம்!

பிரிதலில் மகிழ்ச்சி கொள்.
புரிகிறதா பூவே,
பூப்பவை எல்லாம்
பூஜைக்கு போய் சேர்வதில்லை.

மண்ணை விட்டு நீர் பிரிதல் ஆறு
மண்ணை விட்டு நீர் பிரிதல் ஆவி
மண்ணை விட்டு நீர் பிரிதல் வரம்
மீண்டும் மண்ணுக்கே வருவது புரிதல்.

அடேய் சரவணா .......
மண்ணுக்கும் நீருக்குமே
பிரிதலும் புரிதலும்
இயல்பானது என்றான போது
உனக்கும் எனக்கும் எப்படி வேறாகும்?

ஏனென்றால்,
புரிதல் என்பது பூசாரி !
பிரிதல் என்பதே கடவுள்...!!

வணங்குகிறாள் கவிதாயினி .
# எடுத்துப்போ ....... #

வேட்டைக்காரன் நீ.
நாய் இல்லையென்று நடிக்க வேண்டாம்.
வேட்டையாடி கொண்டு வா
விறகும் கொஞ்சம் கொண்டு வா
ஆக்கி அவித்து தருகிறேன்
போதாது என்று சொல் -
போர்வைக்குள்   வந்து உன்
மீதப்பசி தீர்க்கிறேன்.
விடிவதற்குள் விடுவதென்றால்
இன்றும் என்னை எடுத்துப்போ.

குடுகுடுப்பைக் காரன் நீ
ஜக்கம்மா வாக்கென்று
ஜல்லியடிக்க வேண்டாம்
உங்கம்மாவை சம்மதிக்க வை.
எங்கம்மாவை என்னிடம் விடு.
ஜக்கம்மா வாக்கெல்லாம்
நானே சொல்கிறேன்.
பலிப்பவர்கள் பிழைக்கட்டும்.
என் காதல் வாக்கு பிழையானால்
என்னை உன்னுடனேயே எடுத்துப்போ.

கரடிக்காரன் நீ
உன் கரம் பற்றிய கரடி நான்
இடையில் மரமிருப்பதாய் சொல்லி
இந்த இடறி விழும் நடிப்பெல்லாம்
என்னிடத்தில் வேண்டாம்.
தேன் தானே வேண்டும்
இந்தா,
இதழ்.
ஊசி குத்தும் வேலை வேண்டாம்
இதழ் உறிஞ்சி எடுத்துப்போ.

பாம்பாட்டி நீ
ராஜநாகம் நான்
மகுடி ஊதி பிடிப்பதாய்
என்னிடத்தில் நடிக்க வேண்டாம்
எனக்கு செவி உண்டு
எனக்கும் ஊத தெரியும்
உன் கழுத்தைக் கொடு
பிடித்துக் கொள்கிறேன்.
நீலகண்டன் மகன் தானே நீ ,
அடேய் சரவணா ..............
என் செவியோரம் உன் இதழுரசி
என் விஷம் முழுதும் எடுத்துப்போ.

விஷமில்லா ராஜநாகமாகி
கவிதாயினி எழில்விழி.

வியாழன், 29 ஜூன், 2017

# வெட்கம் #

அடேய் சரவணா ............!
எழில்விழிக்கு வெட்கப்படவே
தெரியாதாம்.
ஊரே சொல்கிறது.
எனக்கு கவலையில்லை.
நீயும் சொல்லும் போது தான்
எனக்கு வெட்கம் வருகிறது.

ஊர் எனக்கு வெட்கப்பட
சொல்லித்தர வில்லை.
ஆனால், நீ
எனக்கு வெட்கப்படுவதைத்தவிர
வேறெந்த சந்தர்ப்பத்தையும்
சொல்லித்தரவேயில்லை.

சேற்று வயல் உழவுக்கு முன்
தளை போட்டு மிதிக்கிறாய்.
மாந்தளையில் கிடைத்த
மாங்காய் பிஞ்சொன்றை
என்னிடம் காட்டி கடித்துச்சிரிக்கிறாய்.
எவ்வளவு வெட்கம் வந்தது
என்பது ஊருக்கு தெரியுமா?

அதே வயல் நடவு நடக்கிறது.
நீ பின் வரப்பில் நடக்கும்
வாசத்தை காற்று எடுத்து வருகிறது.
நாற்று நடுவதில் புதுமையாக
உட்கார்ந்து நடுகிறேன். _ அதில் இருப்பதுதான்
வெட்கம் என்பது ஊருக்கு தெரியுமா?

களை பறிக்கும்  காலம் வந்து
கல்லூரிக்கும் விடுமுறை வந்து
இருவர் வயலிலும் களையும்  வந்து……
உட்கார்ந்து  பறிக்க வாய்ப்பில்லை
என்பது தெரிந்து எதிர் வரப்பில்  வருகிறாய்.
கழுத்தை குனிந்து களையை மறைப்பதிலுள்ள
கஷ்டமும் வெட்கமும் ஊருக்கு தெரியுமா?

உரம் வீச ஊருக்கு முன் கிளம்புகிறாய்.
உனக்கு முன் நான் கிளம்பி விட்டேன்.
கருக்கலுலிலே முடித்த காலைக் கடனுக்கு
என் வயலிலா வந்து காலைக்கழுவுவது?
நானிருப்பது தெரிந்துதான் வந்தாயாம்.
அப்போது வந்த வெட்கம் ஊருக்கு தெரியுமா?

வந்தே விட்டது அந்த அறுவடைக்காலம்.
கதிர்கட்டுடன் என்னை தொடர்கிறாய்.
கருத்து வலிப்பதாய் சுமைதாங்கி நாடுகிறாய்.
நான் உனக்கு முன்பே இறக்கி நிற்கிறேன்.
கதிர்கட்டு மறைப்பில் கட்டி முத்தம் தந்த போது
எனக்கு வந்த வெட்கம் ஊருக்கு தெரியுமா?

உழைப்பின் பலனை பெற்று வருகிறாய்.
உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன்  நான்.
உள்ளாடை ஒன்றும் அதற்குள் ஒற்றைக் கல் மூக்குத்தி ஒன்றும் தந்து செல்கிறாய்
போட்டுக்கொண்டு இன்றிரவு வந்துவிடு.
இப்போது சொல். ஊருக்கு தெரியாமல்
நான் வெட்கப்படுவதே என் இயல்பாய் இருப்பது. !!!

வெட்கங்களுடன்
கவிதாயினி எழில்விழி.
# வெட்கம் #

அடேய் சரவணா ............!
எழில்விழிக்கு வெட்கப்படவே
தெரியாதாம்.
ஊரே சொல்கிறது.
எனக்கு கவலையில்லை.
நீயும் சொல்லும் போது தான்
எனக்கு வெட்கம் வருகிறது.

ஊர் எனக்கு வெட்கப்பட
சொல்லித்தர வில்லை.
ஆனால், நீ
எனக்கு வெட்கப்படுவதைத்தவிர
வேறெந்த சந்தர்ப்பத்தையும்
சொல்லித்தரவேயில்லை.

சேற்று வயல் உழவுக்கு முன்
தளை போட்டு மிதிக்கிறாய்.
மாந்தளையில் கிடைத்த
மாங்காய் பிஞ்சொன்றை
என்னிடம் காட்டி கடித்துச்சிரிக்கிறாய்.
எவ்வளவு வெட்கம் வந்தது
என்பது ஊருக்கு தெரியுமா?

அதே வயல் நடவு நடக்கிறது.
நீ பின் வரப்பில் நடக்கும்
வாசத்தை காற்று எடுத்து வருகிறது.
நாற்று நடுவதில் புதுமையாக
உட்கார்ந்து நடுகிறேன். _ அதில் இருப்பதுதான்
வெட்கம் என்பது ஊருக்கு தெரியுமா?

களை பறிக்கும்  காலம் வந்து
கல்லூரிக்கும் விடுமுறை வந்து
இருவர் வயலிலும் களையும்  வந்து……
உட்கார்ந்து  பறிக்க வாய்ப்பில்லை
என்பது தெரிந்து எதிர் வரப்பில்  வருகிறாய்.
கழுத்தை குனிந்து களையை மறைப்பதிலுள்ள
கஷ்டமும் வெட்கமும் ஊருக்கு தெரியுமா?

உரம் வீச ஊருக்கு முன் கிளம்புகிறாய்.
உனக்கு முன் நான் கிளம்பி விட்டேன்.
கருக்கலுலிலே முடித்த காலைக் கடனுக்கு
என் வயலிலா வந்து காலைக்கழுவுவது?
நானிருப்பது தெரிந்துதான் வந்தாயாம்.
அப்போது வந்த வெட்கம் ஊருக்கு தெரியுமா?

வந்தே விட்டது அந்த அறுவடைக்காலம்.
கதிர்கட்டுடன் என்னை தொடர்கிறாய்.
கருத்து வலிப்பதாய் சுமைதாங்கி நாடுகிறாய்.
நான் உனக்கு முன்பே இறக்கி நிற்கிறேன்.
கதிர்கட்டு மறைப்பில் கட்டி முத்தம் தந்த போது
எனக்கு வந்த வெட்கம் ஊருக்கு தெரியுமா?

உழைப்பின் பலனை பெற்று வருகிறாய்.
உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன்  நான்.
உள்ளாடை ஒன்றும் அதற்குள் ஒற்றைக் கல் மூக்குத்தி ஒன்றும் தந்து செல்கிறாய்
போட்டுக்கொண்டு இன்றிரவு வந்துவிடு.
இப்போது சொல். ஊருக்கு தெரியாமல்
நான் வெட்கப்படுவதே என் இயல்பாய் இருப்பது. !!!

வெட்கங்களுடன்
கவிதாயினி எழில்விழி.

ஞாயிறு, 25 ஜூன், 2017

மீள் பதிவு.

# எந்த நிமிடம் #

யோசித்துப்பார்க்கிறேன்.
உன் மீதான என் காதலின்
ஆரம்பத்தை .
உன்னிடமும் கேட்கிறேன்.
எப்போதும் போல் சிரிக்கிறாய்.

வயசுக்கு வருவதற்கு முதல் நாள்
வரப்பில் வழுக்கி விழுந்தயென்னை
பார்வையில் பக்கம் வந்து
முட்டி தேய்த்து சொடுக்கெடுத்த அந்த
சொர்க்க நிமிடத்திலிருந்தா?

பச்சைஓலை குடிசைகட்ட
மச்சுவீட்டு மாமங்காரன்
சீரோட வந்தப்ப எங்கிட்ட
சீராடி மொகந் திருப்பி நீ
சிரிக்காம நின்ன - அந்த
சித்திர நிமிடத்திலிருந்தா?

குடிசைக்கூடு பிரித்து
முளைத்திருந்த சிறகுக்கு
தாவணி தடுப்பு போட்டு
தண்ணீ எடுக்க நான் வந்தப்ப
தடுப்பு தாண்டி  நின்னு நீ தவிப்புடன்
பார்த்த அந்த தங்க நிமிடத்திலிருந்தா?

ஊர்தாண்டி ஊர்ந்து செல்லும்
அந்த ஒற்றையடிப் பாதை வழி
நெடுஞ்சாலை பேருந்துக்காய் நான்
வருவதற்கு முன் சென்று
இருக்கை துடைத்து வைத்த அந்த
இன்ப நிமிடத்திலிருந்தா?

பார்வை முடித்து சிரிப்பு முடித்து
மெளனம் உடைத்து பேசிய நாள் முடித்து
ஜரிகையிட்ட பேப்பர் சுற்றி
நீ கொடுத்த மூக்குத்திக்கு நான்
முத்தம் கொடுத்த அந்த
முத்தான நிமிடத்திலிருந்தா?

அந்த ஒரு அதிகாலைப்பொழுதில்
ஆத்தங்கரைபிள்ளையாருக்கு
நூற்றியெட்டு தோப்புக்கரணம்
போட்டு முடித்தது ஏனென்று கேட்டதற்கு
ஜோடி மெட்டி தந்து என் ஜோடி நீயென
சொல்லிச் சென்ற அந்த
சுகம் சொன்ன நிமிடத்திலிருந்தா?

எத்தனை யோசித்தும் ஆரம்பம்
எதுவென்று புரியாமல்
உன் முகம் பார்க்கிறேன்.
வெட்கமாய் இருக்கிறதென
விழிகளை மூடிய நிமிடத்தில்
இதழோடு இதழ் இணைத்து
முத்தமிட்டு விலகிய அந்த
முத்தான நிமிடத்தியிருந்தா?

ஆரம்பமே இல்லாத
நம் காதலின் ஆரம்பம் என்னவென்று
யோசித்த நாட்களில் எல்லாமே
ஆதாமும் ஏவாளும் நம் காதலை
யாசகம் கேட்பதாக நீ சொல்லிச் சிரித்த
அந்த நொடி தான் ஆரம்பம் என்பதாய்
அடேய் சரவணா ........
நீ இல்லாத இந்த பொழுதுகள்
இன்று உணர்த்திச் செல்கிறது.

சனி, 24 ஜூன், 2017

# பின் தொடராதீர்கள் #

ஒரு தோளில் ஊது பத்தி பையும்
மறு தோளில் குருட்டு நண்பன்
கையும் தாங்கி நடக்கும்
நடுத்தெரு நம்பியண்ணன் மகன்
சிரித்தே கொல்லும் செவிட்டு ஸ்ரீதரனை
பின் தொடர்ந்து விடாதீர்கள்
நட்பென்றால் என்ன என்பதை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

காலைக்கடனுக்கோ
கத்திரிக்கா காட்டுக்கோ
கபடி விளையாட்டுக்கோ
கட்சி தகராறுக்கோ
காதல் தூதுக்கோ
களவு பஞ்சாயத்துக்கோ
எங்கோ செல்லும்
கனகு மாமாவை பின்தொடரும்
அவர் நாயை மட்டும்
பின் தொடர்ந்து விடாதீர்கள்
நன்றியென்றால் என்னவென்பதை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

ஆச்சரியம் ஆனால் உண்மை.
சுப்பையா தாத்தா
எப்போது கிளம்பினாலும்
அவர் கையில் பிடிக்காமலே
கழனிக்கு பின்னாலயே
செல்லும் செவலைகளை மட்டும்
பின்தொடர்ந்து விடாதீர்கள்.
உழைப்பென்றால் என்னவென்பதை
நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடும்.

மேலத்தெரு மணி மனைவியும்
கீழத்தெரு காமாச்சி புருசனும்
இரண்டாம் காட்சி சினிமாக்கு
தனித்தனியா போறாங்கன்னு
நெனச்சி ஒரு போதும் அவர்களை
பின்தொடர்ந்து விடாதீர்கள்.
முற்றுப்பெறாத ஒருகாமத்தின்
முகவரி காட்டாத முகவரியை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

தரையைப் பார்த்தபடி
தெருவின் ஓரமாக நடந்து
எதிர் வரும் ஆண்களின்
பார்வை தவிர்த்து
பெண்களின் பார்வை வெறித்து
வழியும் கண்ணீரை
மிட்டாய் மறைத்திருக்கும்
மஞ்சள் பையில் துடைத்து
நடந்து வரும் கணபதி அண்ணனை
பின் தொடர்ந்து விடாதீர்கள்.
குழந்தைகளை துறந்து
குழந்தைசாமியுடன் ஓடிப்போன
குப்பாயி அண்ணியின் துரோகத்தை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

கோவில் திண்ணை நிழலிலும்
ஆத்தங்கரை ஆலமர நிழலிலும்
மச்சிவீட்டு மாலை நிழலிலும்
மாந்தோப்பு மதிய நிழலிலும் நின்று
இன்றைய தன் குடிசையையும்
சென்ற வருடம் ஏலத்தில்
கைமாறிய தன் மச்சி வீட்டையும்
வெறித்துப்பார்க்கும்
வீராச்சாமி சித்தப்பாவை
பின்தொடர்ந்து விடாதீர்கள்.
கடனுக்கு கையெழுத்து போடுவதும்
கழுத்துக்கு தூக்கு மாட்டுவதும்
ஒன்றென்ற உண்மையை
நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடும்.

ஏரியில் நான் கண்ட
ஒற்றைத் தண்டு
இரட்டைத்தாமரையை
நான் நீருக்குள் மறைத்து
வைத்திருப்பதை தெரியாமல்
பறித்து வந்து பரிசளிப்பதாய் கூறி
பராக்கிரமமாய் செல்லும்
என் சரவணனை ஒருபோதும்
பின் தொடர்ந்து விடாதீர்கள்
காதல் என்றால் என்னவென்பதை
கணநேர இடைவெளிக்குள்
நீங்கள் கண்டு கொள்ளக்கூடும்.

என்னோடும் உள்ள காதலுடன்
கவிதாயினி எழில்விழி.

திங்கள், 12 ஜூன், 2017

என் முகநூல் நண்பர் பாரதி தமிழ்ச்சங்கம்
அவர்கள் தந்தது இந்த

                   # தலைப்பு (பூ) #

தலைப்புக்குத்தான் தடுமாறுகிறேன்
என் தங்கமே, நீ என்
தலைப்பே இல்லாத தனி மொழி.

என் ஒவ்வொரு பருவத்தையும்
தலைப்பிட்டு தாலாட்டியது
உன் ஓசையற்ற உலகப்பொது மொழி .

என் ஒவ்வொரு உணவுக்கும்
தலைப்பிட்டு ஊட்டியது
தந்தையுமான உன் தாய்மொழி.

என் ஒவ்வொரு உடைகளையும்
தலைப்பிட்டு உருவிக்கொண்டது
தாபங்களாலான உன் காதல்மொழி.

நானுறங்கிய ஒவ்வொரு அறைக்கும்
பள்ளியறை என்றே தலைப்பிட்டது
பாசங்களாலான உன் பருவ மொழி.

நம் ஒவ்வொரு இரவு சீண்டல்களுக்கும்
ஊடல் என்றே தலைப்பிட்டது
கூடல் என்ற உன் கூத்து மொழி .

சத்தங்களில்லா நம் முத்தங்களுக்கு
சந்தோசம் என்றே தலைப்பிட்டது
ஒன்றை சிரிப்பாலான உன் உண்மை மொழி.

கூடலுக்கு பின்னான ஒரு நாளிரவில்
எனக்கு வேசி என்றே தலைப்பிட்டது
வேசங்களே இல்லாத உன் நேச மொழி.

அடேய் சரவணா ..............

எத்தனை தலைப்புகள் எனக்கு தந்தாய்
உனக்காக என் தலைப்பு இது.
உலகில் நான் யாருக்கும் தராத தலைப்பு.

ஆமாம்.
நீ தினம் தந்த என் தலைப்பூவுக்கு
நான் உனக்கு தந்த உன்னத தலைப்பு.
தகப்பன் என்ற தலைப்பு
என் தலைமகனே!
உனக்கது சிறப்பு!!

தலைப்பூவுடன்
கவிதாயினி எழில்விழி
Sulochana Karuppuchamy

என் துயரங்களின் வடிகால்.
என் தூரங்களின் மனக்குதிரை
என் சந்தோசங்களின் சாரல் மழை.
என் ராஜ விருந்து.
என் ஆயிரம் வர்ண வானவில்
என் வாசல் 1000 புள்ளிக் கோலம்
என் குளியலறைக்கதவு.
என் பள்ளியறைப்படுக்கை .
என் மாளிகையின் ராஜவீதி.
என் ராஜ்ஜியத்தின் மும்மாரி .
என் கலைகளின் ராஜகுரு .
என் மனசாட்சியின் மெளன குரு.
என் வித்தைகளின் விதை நெல் .
என் எழுதுகோலின் இனிய முனை
என் எழுத்தின் பெண்பால் துரோணர்.
என் கட்டை விரல் வைத்த வெற்றித்திலகம்.
என் இனிய துரோகி.
என் நட்பின் முக்கனி.
என் கவிதையின் விதை
காலம் முழுதும் என்னை விதை.

எத்தனை புழக்கங்கள்
எப்படியும் இருந்தாலும்
இனியவளே
நீ
எனக்குள் இருப்பதால்
பிரிவில்லை
துயரில்லை.
ஒரு போதும் வலியில்லை.
வாழ்த்துவதில் வாழ்கிறேன்.
வாழ்நாள் இன்றென்று
என்றென்றும் வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சுலோச்சனா
# இந்த ...................... ப் போல #

பல்லாக்கு தூக்கிகளுக்கு
தோளுக்கு வலிவில்லை.
சப்பரத்தில் ஏற்றி விடலாம்.
சப்பரம் இழுப்பதற்கு
உடம்பில் தெம்பில்லை
தேரில் ஏற்றி விடலாம்.
தேர் இழுக்க ஊர் கூடும்.
முடிவில் தேரை இழுத்து
தெருவில் விட்டு விட்டு
ஊரைப் பார்க்க ஓடிப்போய்விடும்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.

தேனிக்கு உழைப்பிருக்கு
கூடு கட்டி குடியிருக்கட்டும்.
உச்சிமரத்தில்  அடை கட்டட்டும்.
ஊசி போட்டு உறிஞ்சி கொள்ளலாம்.
அடையில் தேன் பிழிந்தால்
அப்படியே நக்கி கொள்ளலாம்.
நாய் பின்புறத்தில் தடவி விட்டால்
நமக்கது எதுக்காகும்.?
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.

ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி
பெருமாளுக்கு கருடனை பிடித்து கொடுத்து
உட்கார வைத்து  வைகுந்தம்  அனுப்பி விட்டு
செயற்கை கோளனுப்பி
வைகுந்த வாசலை மூடி வைப்போம்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.

பசிக்காத சில வயிற்றுக்கு
அஷ்ட கனிகள்  அரிந்து வைப்போம்.
அதிலொன்று குறையும் என்றால்
தேடிப் பிடித்து தின்ன வைப்போம்.
வாசலில் நிற்கும் வறியவர் கூட்டத்திற்கு
காஞ்சிரஞ்காய் அவித்து கொடுப்போம்.
பாழாய் போன இந்த ........... த்தைப்போல.

அடேய் சரவணா .........
அங்கிருந்து கிளம்பி வந்து
ஆண்டைகளை நேரில் பார்த்து
பசிக்காத வயிற்றுக்கு பால்சோறும்
பசித்த வயிறுக்கு  பாம்புக்கறியும்
தருவதென்ன நீதியென்று
கன்னம் அறைந்து கேட்டுச்சொல்.

பணத்தின் மீது வெறுப்பின்றி
கவிதாயினி எழில்விழி.
இந்த சரவணக்கவிதை க்கு தலைப்பு தந்தமைக்கு என் இனிய தோழி Sulochana Karuppusamy  க்கு நன்றி.

# ஒற்றைப்பனை மரம் #

அது எப்படி?
நம் சந்திப்புக்காலைகளின்
சம்பிரதாய விசாரிப்புகளை எல்லாம்
என் உதடுகளில் இருந்தே
உன்னால் தொடங்க முடிகிறது?

காயப்படுத்துவதற்கு என்றே
காதலிக்கிறாய் போலும்.
அதற்காக இப்படியா ?
இதழ்களிலும் இடுப்பிலுமா
கடித்து வைப்பது?

உன் மெளனங்களுக்கு
ஒலிகொடுத்தால் ''இச்" சென்ற
சப்தமே முப்போதும் கேட்கிறது.
உம் என்ற என்  மொழி கூட
ஊமையாகித்தான் கிடக்கிறது.

என் கால்களால் நீ நடப்பதாக
ஊருக்குள் பீற்றித்திரிகிறாய்.
உன் நிழலில் நான் நடப்பதை
ஊருக்குள் யாரிடம் போய்
நான் பீற்றிக்கொள்வது?

என் முத்த தாக்குதல்களுக்கு
கேடயமாக உன் உதடுகளை நீ
உபயோகப்படுத்துவதுதான்
இந்த உலகில் "கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் "ன்
உச்சபட்ச விஞ்ஞான  கண்டுபிடிப்பு,

எட்டிக்காயோ? பாவக்காயோ?
மென்று வந்து நீ தரும்
முத்தம் இனிப்பதாய் சொல்வது
நான் மட்டும்தானா?
இல்லை
வேறெவளுக்காவது இனிப்பதாக நீ
கேள்வியாவது பட்டிருக்கிறாயா?

உன் மௌன விசாரிப்புகளில்
என் உடல் நலம் பெற்றதும்
இருட்டுப் பொழுதுகளில்
நானுன் நிழலானதும்
இயல்பாய் நிற்கும் இந்த
ஒற்றைப்பனை மர அடியில் தானே
அரங்கேறியது.

இத்தனைக்கும் சாட்சியான
இந்த ஒற்றைப்பனை மரம்
எப்போதும் போல இப்போதும்
இரண்டு நிமிடத்திற்கு மேல்
யாருக்கும் நிழல் தர மறுக்கிறது.
நம்மைத்தவிர.
நான் தனியாக வரும் போதும்
என்னிடம் அன்பு மறுப்பதில்லை.

அடேய் சரவணா ..........

பங்காளி உறவும்
பனைமர நிழலும்
உன்னுடைய காதலும்
ஒன்று தானோ சரவணா.!!!

கவிதாயினி எழில்விழி.
திரு.இரா எட்வின் அவர்கள்,  அவர்கள் பக்கத்தில் கேட்டுக்கொண்டமைக்காக !

# சுடுகாடு #

வாழ்பவர் மனதில் தினமும் தோன்றும்
வண்ணங்களற்ற வானவில்..

சதமடித்தவனுக்கும் சறுக்கியவனுக்கும்
ஒரே மாதிரி கை தட்டும் உன்னத ரசிகன்.

கடல் மீது நடை பயிலும்
யூதாசின் கால்கள்.

இயேசு கழுத்து உருத்திராட்சம்
சிவன் சுமந்த சிலுவை.

மண்ணுக்கு உரம் தயாரிக்கும்
மாற்றமில்லா தொழிற்சாலை.

ஒற்றைக்குழிக்குள் உலகை மறைக்கும்
பிரபஞ்ச கருந்துளை.

அன்புக்கு இலக்கணம் சொல்லும்
அரிச்சந்திர அரிச்சுவடி

பூமித்தாய்க்கு  சமபந்தி போஜனம்
அளிக்கும் சாதீயமற்ற உணவறை.

நிழல் இல்லா வெளிச்சம்
இருளின் நிழல்.

உணவு பற்றி உத்தரவிடும் அரச வம்ச
மாடுகள் மேயும் பாலைவனம்.

தோற்பதற்கு மட்டும் பாடம் நடத்தும்
உலக பொது பல்கலைக்கழகம்.

அடேய் சரவணா ...................

என்னை விட்டு நீ அன்பால் பிரிந்தவுடன்
அனுபவங்கள் தந்த  ஆரம்பள்ளி கூடம்.

ஆரம்பப்பள்ளி பயிலும்
கவிதாயினி எழில்விழி.
# காதல் #

மூட முடியாத அளவுக்கு என் காதலால்
நிரம்பித்தான் வழிகிறது.
உன் காதல் கஜானா.
நீயோ கஞ்சன்
நிரம்பவில்லையே என்கிறாய்.

மயிலுக்கும் குயிலுக்கும்
மானுக்கும் மீனுக்கும்
எனக்குள் இடமளிக்கிறாய்.
என் காதலுக்கு எங்கே
இடம் ஒதுக்கியிருக்கிறாய்.?

மழை பெய்கிறது  நனைகிறாய்
மழை நீர் உன் மார்பில் வழிகிறது.
மழை நிற்பதற்குள்
மழை என் மார்பை துளைக்கும் படி
உன் மேலாடைக்குள் என்னை மூடிக்கொள்.

அடேய் சரவணா ..............

கடவுள் எழுதிய காதல் கவிதை நான்
தவறென்று தெரிந்தும்
தன் பெயரை எழுதிக்கொண்டான்.
படிப்பதற்கு முன்பாகவே நீ - அந்த
எழுத்துப்பிழை நீக்கி என்னைக்கொள்.

கவிதாயினி எழில்விழி.
# காதல் #

சோதிடத்தில் கூற மறந்த
பதினொன்றாம் பொருத்தம்.

பார்வைக்கே சிக்காத
பண்பாட்டு வேசம்.

மானுடத்திற்கு உரமாகும்
மனம் உதிர்க்கும் இலைகள்.

விலையில்லாத முதிர்கன்னியின்
உடல் வீசும் உன்னத வாசம்.

உற்பத்தி செய்யப்படாத
விற்பனை விளை பொருள்.

ஒவ்வொருக்கு உள்ளேயும் உலா வரும்
மூன்று செல் அமீ்பா.

உனக்கும் எனக்கும் வராத வரை
வரைமுறை இல்லா புதுக்கவிதை.

அடேய் சரவணா ........... .

உனக்கும் எனக்கும் வந்த பின்பு
பிரபஞ்சம் தாண்டிய மரபுக்கவிதை.

காதலுடன்
கவிதாயினி எழில்விழி.
என் முகநூல் தோழி Udhay Rathna
அவர்களின் சகோதரருக்கு நினைவு நாள். அவரது டைம்லைனில் ஷேர் ஆப்சன் இல்லாத காரணத்தினால் Copy, paste பதிவாக.

# சக உதரம் #

4..ஆம் ஆண்டு நினைவு தினம்..

சகோதரா.
சக உதரமாய்
பிறந்தால்தான் என்னமோ
உதறியே நின்றாய்.
ஆனாலும் உணர்வில்
ஒன்றியே இருந்தாய்.

பிறப்பின் நெருக்கம்
வளர்ப்பின் வாசம்
உறவின் உருக்கம்
உள்ளத்தில் சுருக்கி மற்றவர்கள் பேசுவதை செவிசாய்த்து என்னிடம் காட்டும்
உணர்வுகளை மறைத்தாய்.

எனக்குத் தெரியும்
எருக்கம் பூக்களும்
பூசைக்கு உதவும்.
நெருஞ்சிப்பூக்களும்
மருந்துக்கு ஆகும்.

காலம் பிரித்ததை உன்
பிரிவுக்கட்டில் உணர்த்திய போது
யுகம் பல கடந்து அதை நீ உணர்ந்த போது
என் கையுன் நெஞ்சமர்த்தி
கண்கள் கலங்கிய போது
காலத்தை சபித்தோம். அந்த
கடவுளையும் சபித்தோம்.

இதோ
இன்று நீ
பிஞ்ஞகனாய் மாறி
பிறவி கடந்தாய்.
பிரபஞ்சம் தாண்டி நாங்கள்
துறவி ஆனோம்..

தாய்மைப்பேறு காலம் தாண்டியும்
தாயாய் உன்னை சுமக்கிறேன்.
மகனாய் பிறக்கும் வழி மறுத்து என்
மகளில் வந்து பிறக்கிறான்.

உருவம் மாறி அருவம் ஆகி
உணர்த்தும் காட்சி அருமை அருமை
உணர்ந்தோம் நாங்கள்
உந்தன் அன்பின் பெருமை பெருமை..

இனியொரு பிறவி இருப்பின் அண்ணா
பிறப்போம் நம் தாய் கருவில்
நான் பெரிதாக, நீ சிறிதாக.
ஏனெனில்
தமக்கையென்பவள் தாயில் பாதி
தம்பியென்பவன் மகனில் பாதி.

பிரியங்களுடன்
தங்கை..
அப்பா..
கண்ணண்..
சிந்து..
பிரவின் மற்றும் மோனிஸ்ரீ.
# முடிவுரையும் முகவுரையும். #

மண்ணில் என் பிரிவுக்காய்
மாந்தர் யாரும் அழ வேண்டாம்.
இருக்கும் போதுதான் அழ வைத்தேன்
இறந்த பிறகுமா?

புகழ் மலரை கொய்து
கொண்டிருந்தாயே,
இப்போதே பூச்சூடி போகிறாயே!
என்னருமை தோழி, நீ
கதறுவது என் காதுகளிலும் கேட்கிறது.

புகழ்மலரோடு இடையிடையே
காகித மலரையும்
சேர்த்துக்கொய்தேனே
தெரியாதா உனக்கு?

இவ்வளவு குறுகிய காலம்தான்
மண்ணுலகில் என் வாழ்வென்பது
முன்பேயெனக்கு தெரிந்திருந்தால்
உன் முந்தி இழுத்திருக்க மாட்டேன்.

என் வாழ்வின் பெரும் பகுதியை
உணவருந்தும்  அறையிலோ
உறங்கும் அறையிலோ
திரையரங்க கூட்டத்திலோ
கழித்திருக்க மாட்டேன்.

முக்கியமாய் மாமன்மகள் உன்
மார் பிடித்திருக்க மாட்டேன்.
பிட்டம் கிள்ளி பின்னல் இழுத்து
முத்தம் கொடுத்து முயங்கியிருக்க மாட்டேன்.

காதை கொடேன்.
காமம் கழித்த கதையொன்று சொல்ல,
ஆத்தோர குடிசைக்காரிக்கு என்
அந்தரங்கம் காட்டியிருக்க மாட்டேன்.

இத்தனையும் தெரியுமுனக்கு
இயல்பாக இருந்து கொண்டாய்.
உன்னியல்பில் தூசியேனும்
என்னியல்பில் இல்லையடி.

காதலில் நீயொரு
எழில்விழியாய் ஆனாய்,
காதலன் நான் தான்
சரவணனாய்  இல்லை.

கவிதாயினி எழில்விழி.

வியாழன், 18 மே, 2017

# நிர்வாணம் அழகானது #
குழந்தைகள் நிர்வாணம்
குதூகலமான அழகு.
கால்நடைகள் நிர்வாணம் 
கடவுளின் அழகு.
கட்டிலறை நிர்வாணம்
காமத்தின் அழகு.
பைத்தியக்காரன் நிர்வாணம்
காலத்தை வென்ற அழகு.
குடிகாரன் நிர்வாணம்
கொழுப்பெடுத்த அழகு.
அவுசாரி நிர்வாணம்
அந்தப்பொழுதுக்கு அழகு.
மரங்களின் நிர்வாணம்
மங்கலமான அழகு.
பொழுதுகளின் நிர்வாணம்
பொதுவாகவே அழகு.
காற்றின் நிர்வாணம்
காலத்துக்கும் அழகு.
நெருப்பின் நிர்வாணம்
பொறுப்பான அழகு.
நீரின் நிர்வாணம்
நிலத்திற்கு அழகு.
ஆகாயத்தின் நிர்வாணமே
அனைத்திலும் அழகு.
ஆடைகளால் மறைக்கப்படும்
நிர்வாணங்களின் அழகை
குடைகளால் தடுக்கப்படும்
தூறலோடு ஒப்பிடுங்கள்.
அழகில்லாத நிர்வாணம்
ஆண்டவனுக்கும் கிடையாது.
இதோ,
இன்று முதன்முதலாக
ஒரு அவமான நிர்வாணம்.
உன் ஒரு ஜாண் வயிற்றுக்கு உணவளித்த
அந்த உழவன் உடையவிழ்த்த நிர்வாணம்.
அவன் நின்றது,
ஆடை வேண்டிய நிர்வாணமல்ல,
ஆசைப்பட்ட நிர்வாணமல்ல.
வேண்டுதலுக்கான நிர்வாணம்
வீரியமான நிர்வாணம்.
நியாயத்திற்கான நிர்வாணம்.
நியாயமான நிர்வாணம்.
ஆளும் வர்க்கத்து ஆண்டைகளே.
நினைவில் வையுங்கள்.
சேற்றில் அமர்ந்து நாற்று பிடுங்கிய
அவன் உறுப்புகளில் கசிந்த
வியர்வை பட்ட வீரியத்தில் தான்
உங்களுக்கான உணவுகள்
உருவாக்கப்பட்டது.
இப்போதும் அந்த நிர்வாணம்
உங்களுக்கு புனிதமாக
தெரியவில்லையா?
உங்கள் ............. ஒரு ........... என்பதை
ஒத்துக் கொண்டு ஓடிப் போங்கள்.
கோபங்களுடன்
கவிதாயினி எழில்விழி.
# சாதி இரண்டொழிய...... #
ஜாதி இரண்டுதான் - ஆனால்
காக்கை குருவியை தன் ஜாதி என்ற
பாரதிக்குத்தான் தெரியவில்லை.
மனிதனுக்கு இது பொருந்தாதென்பது.
ஜாதி இரண்டுதான்
ஆணும் பெண்ணும்.
துணைப்பிரிவு இரண்டுதான்.
உயர்வும் தாழ்வும் .
உட்பிரிவும் இரண்டுதான்.
பணக்காரன் ஏழை.
ஆனால் சிறப்புப்பிரிவு ஒன்றுண்டு
ஓங்கியது ஒடுக்கியது.
அன்னம் தண்ணி அனுமதி உண்டு.
அவன் அங்கும் இவன் இங்கும் மட்டும்.
மேலாடைகள் கூட பொதுதான்.
அவனுக்கு இடுப்பு இவனுக்கு கக்கம்.
இடுப்புக்கு கீழே அம்மணமாயினும்
கக்கம் விட்டு இறங்கக்கூடாது.
உங்கள் தூண்டில் மீன்களுக்கு
நாங்கள் புழுவானோம்.
உங்களுக்கு அறுத்த ஆடு உரித்து தந்த
எங்களுக்கு எலிகளை பிடித்துத்தர
உங்கள் நாய்களுக்கு உத்தரவு போட்டீர்கள்.
நாட்டுச்சக்கரை காப்பி தந்து
கார்பன் இனிப்புகளை
எடுத்துக்கொண்டீர்கள் என்று சிரித்தோம்.
நாட்டுச்சக்கரை பலத்தையெல்லாம்
உழைப்பென்ற பெயரில் நீங்கள்
உறிஞ்சிக் கொண்டதை
உணர்ந்த போதில் நாங்கள்
சக்கையாய் ஆகியிருந்தோம்.
எங்கள் திருமணங்களுக்கு பரிசப்பணம்
தந்து விட்டு முதலிரவுப்பாய்களை
உங்கள் அறைகளில் ஒளித்து வைத்தீர்கள்.
உறை பிரித்த சோப்பு வாசத்தை
நீங்கள் நுகர்ந்து விட்டு கறைபடுத்தி
கழுவி அனுப்பினீர்கள்.
உறை பிரிக்க நாங்கள் கை நீட்டும் முன்பே
எங்கள் நாசிகளை நாசமாக்கினீர்கள்.
சமநிலை மீறலாக சில சமயம்
உங்கள் சோப்புகள் எங்களை
குளித்துக்கொண்ட போது - எங்கள்
பரம்பரை வேர் வரை
பாதரசம் ஊற்றினீர்கள்.
பட்ட மர நிழலமர்ந்து உங்களுக்குள்
பாக்கு வெற்றிலை மாற்றினீர்கள்.
எங்கள் கூன் நிமிர்ந்து விட
கூடாதென்று உங்கள்
சுமை தாங்கி கற்களை
உடைத்துக்கொண்டீர்கள்.
கல்வி மறுத்தீர்கள் - எனவே
கேள்விகளை மறந்து விட்டோம்.
உண்ணுவதற்கு உமி தந்தீர்கள்.
தவிடே தங்கமென்று ஒத்துக் கொண்டோம்.
எங்கள் புஜத்திற்கு கீழே
கோடாரிக் காம்புக்கான
எழுத்து மரங்கள்
வளர்வதையும்
கூப்பிய கைகளுக்குள் கல்விக்
கோடாரிகள் இருப்பதையும்
எத்தனை காலத்திற்கு
மறைக்க வேண்டுமோ?
இனியுமிந்த ஒரு பிறவி
பிறக்கவும் வேண்டுமோ .
என் சிவனே !!!
எழுத்தை எனக்கு தந்த நன்றிக்கு - இனி
உன் கழுத்து நீலத்திற்கு களிம்பு தருவேன்.
கல்வி வேண்டி
கவிதாயினி எழில்விழி.
# பொய்மையும் வாய்மையிடத்து.... #
உலகத்து பொய்களின்
ஒட்டுமொத்த கை காட்டி.
உள்ளதை உள்ளபடி
ஒளித்து வைத்து விட்டு
கள்ளத்தை கருவாக்கி
காகிதத்தில் நிஜமெழுதும்
உலகபுகழ் பெற்றவர்கள்
தினமெழுதும் நாட்குறிப்பு.
உலகின் முதல் பொய்
கடவுள்தான் சொன்னார்.
விலக்கப்பட்ட கனி உண்டதால்
ஆதாம் அவராகவில்லை.
ஏவாள் ஏமாறியது தான் மிச்சம்.
ஆனால் கடவுள் தன்னை
காப்பாற்றிக்கொள்ள
ஒரு சாக்ரடீசை சாத்தான்
என்று சொன்ன பொய்
அங்கேதான் அரங்கேறியது.
புத்தன் பசி துறந்தான்.
பெண் துறந்தான். மண் துறந்தான்.
வீடு துறந்தான்.
நாடு நகர் ஆள் படை அம்பு
அத்தனையும் துறந்தான்.
ஆசையையும் துறந்தான்
என்பவரை நான்
கன்னத்தில் அறைவேன்.
ஆசைகளை துறந்து விட்டதை
நான் அறிந்து கொள்ள
ஆசைப்பட்ட எத்தனவன்.
ஷாஜகானின் பொய்களில்
தலையாய பொய்
மும்தாஜை காதலிப்பதாக
சொன்ன பொய்தான்.
வெட்டப்பட்டு வீசிய பின்
சாவதற்கு முன் என்னிடம்
சொல்லி விட்டுத்தான் செத்தான்
மும்தாஜின் காதல் கணவன்.
கோள்களின் பொய்யில்
ஜோசியன் வாழுகிறான்.
கோள்கள் சொல்லிய பொய்யில்
மனிதன் கோள்மூட்டி வாழுகிறான்.
சாகும் நாள் சமீபம் என்று
பொய் சொல்லித்தான் இங்கே
கடவுளும் வாழுகிறார்.
ஜாதியின் பொய்களில்
பல சமூகம் வாழ்கிறது.
கல்வியின் பொய்களில்
சில திறமைகள் வாழ்கிறது.
வீரத்தின் பொய்யில்
வீணர்கள் வாழும் போது
சரித்திரப் பொய்களில்
பல சக்கரவர்த்திகள்
வாழ மாட்டார்களா என்ன?
கடவுளின் பொய்யில்
சாத்தான் வாழும் போது
காதலின் பொய்யில்
சரவணன் வாழட்டும்,
அடேய் சரவணா..........
காதல் பொய் என்றாலும் நீ நிஜம்.
ஆமாம்.
பொய்மையும் வாய்மையிடத்து...........
காதலில் பொய்யில்லாத
கவிதாயினி எழில்விழி
# புத்தக தினம் #
அடேய் சரவணா ...............
அப்போது என் பெயர்
எழில்விழி என்று தான் இருந்தது.
உன்னை படிப்பதற்காக
புத்தகப்பூச்சியாக
உன்னில் நுழைந்தேன்.
வெளிவர மனமின்றி
படித்துக் கொண்டே
இருக்கிறேன்.
இப்போது என் பெயர்
பட்டாம்பூச்சி என்கிறார்கள்.
இனியும் படிக்கவே விரும்பும்
கவிதாயினி எழில்விழி.
# உள்ளம் பேசும் காதல் மொழி #
காதலின் முதல் மொழி மெளனம்
என்பதில் காதலர் எவருக்கும்
மாற்றுக்கருத்து கிடையாது.
சொல், வரி, எழுத்து வடிவம்
எதுவுமற்ற மொழியென்பதில்
மீதமுள்ளவருக்கு மறுப்பும் கிடையாது.
மௌன மொழிகளுக்கு
வடிவங்கள் பலவுண்டு.
கடவுளுக்கே தெரியாத
காதல் மொழி அதில் ஒன்று.
முத்தங்களின் போது மட்டும்
சிறு சத்தம் தரும் சந்த மொழியது.
உதடு பேசாமல் ஒரு மொழி பேசும்.
கண்களோ பார்வையால்
பல மொழி பேசும்.
நடக்கும் நடையோ
நானூறு மொழி பேசும்.
விரல் தொடங்கி விழிமுடிய
நாலாயிரம் மொழி பேசும்.
கொட்டாங்கச்சி, குரும்பை
தொடங்கி ஆறு நாள் வயதான
தாமரை மொக்கு காட்டி - அவன்
தண்ணீரில் மூழ்கி கொள்வான்.
என் கை மார் மறைக்கும்
மாராப்பை மறுபடியும் சரி செய்யும்.
கோட்டை நெல் குவியலில் இருந்து
நாழி நெல்லெடுத்து
நற்குவியல் செய்து வைத்து
அவன் பார்க்கும் போதெல்லாம்,
என் பருவத்திற்கு - ஏழாயிரம்
மொழிகள் எளிதில் புரியும்.
இரண்டு விரல்களை பின்னி காட்டும்
அவன் ஒவ்வொரு சைகையிலும் எனக்கு
இரண்டு இடங்களில் துன்ப வலியும்
இருபது இடங்களில் இன்ப வலியும்
வந்து வந்து மொழி பேசி
வரலாறு படைத்து செல்லும்.
நடந்து சொல்லும் உடல் மொழியின்
நளினத்தில், நிழலில், வழியில்,
திசையில், நேரத்தில்
உணர்த்தி விடும் விசயங்கள்
காதலர்கள் எமக்கின்றி
கடவுளுக்கு கூட தெரியாது.
காதல் மொழிகளால் உணர்த்தப்படுவதன்று.
காதல் பாஷைகளால் பரிபாலிப்பதன்று.
காதல் பேச்சுகளால் பேசிக்கொள்வதன்று
காதல் வார்த்தைகளால் வாசிப்பதன்று.
காதல் மெளனங்களால் கரம் இணைப்பது.
காதல் சைகைளால் சாகாமல் வாழ்வது.
காதல் நேசங்களால் நேசிக்கப்படுவது.
காதல் வாசிப்புகள் இன்றி வரலாறாவது.
பாஷைகளுக்கு புரியாத
பாசங்களை தெரிந்து கொள்ள,
மொழிகளுக்கு புரியாத
வழிகளை கண்டு கொள்ள ,
வார்த்தைகளின் வீரியத்தில்
வாழ்க்கையை கடந்து செல்ல,
காதலின் உச்சத்தில் யாரோ ஒருவர்
தன்னை கடவுளிடம் ஒப்புக்கொடுங்கள்'
ஆமாம். சரவணனைப் போல.
மெளனங்களோடு மொழிபேசும்
கவிதாயினி எழில்விழி.
# காதலென்பது யாதெனில் #
துரோகமென்பது யாதெனில்,
துரோணர் ஏகலைவனிடம்
துணிந்து கேட்டது.
வீரமென்பது யாதெனில்,
துரோணரிடம் ஏகலைவன்
தன் கட்டைவிரல் வெட்டி வீசியது.
தியாகமென்பது யாதெனில்,
களப்பலிக்கு காவு கொடுக்க
அரவான் தன்னையே தந்தது.
தானமென்பது யாதெனில்,
கண்ணனுக்கு கர்ணன் ரத்தத்தால்
தாரை வார்த்து கொடுத்தது.
பிச்சையென்பது யாதெனில்,
கர்ணனிடம் கண்ணன்
கையேந்தி நின்றது.
நட்பென்பது யாதெனில்,
எடுக்கவோ கோர்க்கவோ என்று
கெளரவர் தலைவன் கேட்டது.
சூட்சுமம் என்பது யாதெனில்,
சகுனியின் பகடைக்கு கண்ணன்
பாண்டவர் தலைவனை காயாக்கியது.
தருமம் என்பது யாதெனில்,
மாத்திரிக்கு மகன் வேண்டி தருமன்
சகாதேவனை உயிர்ப்பிக்க கேட்டது.
சபதம் என்பது யாதெனில்,
கெளரவர், பாண்டவர், பாஞ்சாலி
நாக்கினால் கண்ணன் நாடியது.
போரென்பது யாதெனில்,
குருச்சேத்திரக் களத்தில் கண்ணன்
கீதை சொல்லி முடித்தது.
தோல்வியென்பது யாதெனில்,
இலக்கணம் மீறிய தாக்குதலில் துரியன்
தொடை உடைத்ததில் பீமன் பெற்றது.
இனி
இந்த இதிகாச மாந்தருக்கு
இதுவரை தெரியாத ஒன்றை
சொல்லிக்கொடுப்போமா?
காதலென்பது யாதெனில்
................................
உங்களுக்கு வகுப்பெடுக்க
எனக்கு வாய்ப்பில்லை.
கண்ணா -
அவனை சற்று அனுப்பி வை.
அத்தனையும் கற்றுத்தந்து
அனுப்பி வைக்கிறோம்.
அடேய் சரவணா..........
கால இயந்திரம் ஏறி வந்து
என்னை ஒரு நொடி மட்டும்
சந்தித்து விட்டுப்போ.
காதல் என்பது யாதென்பதை
கண்ணனும் கூட கற்றுக்கொள்ளட்டும்.
என்றும் காதலுடன்
கவிதாயினி எழில்விழி.
# அன்பு #
வரையறைக்குள் சிக்காத
வார்த்தைகளின் வனப்பு.
மூளையின் முனைகளில்
வேரோடும் அமைப்பு .
மூளை தாண்டி வரும் போது
விற்பனை பொருளாவதில்
இனியும் இல்லை வியப்பு.
பிரபஞ்ச உணர்ச்சிகளின்
முதல் பெரும் பரிமாணம்.
பின்னொரு நாளில்
பண்டமாற்றாகி
பரிணாமம் ஆனதில்
கிடைத்ததொரு அவமானம்.
ரொட்டிக்கு வாலாட்டும் நாயின் அன்பு
கல்லால் அடிபடும் வரையில் தான்.
மகுடிக்கு ஆடும் பாம்பின் அன்பு
மயிலின் பார்வையில் படும் வரைதான்.
முதுமையின் கவனிப்புக்கு
இளமையில் சேமிக்கப்படும்
பொருளின் பெயர் தான்
பெற்றவர் அன்பு.
கட்டிலறை கதவுக்குள்
கண்மூடி தூங்கவும்
கட்டிக் கொண்டு தூங்கவும்
காட்டப்படுவதே கணவன் மனைவி அன்பு.
சார்பில்லாத அன்பென்பது
சாத்தியமில்லாத ஒன்று.
ஆகாயத்திற்கு நிலத்தின் மீது அன்பில்லை.
நிலத்திற்கு நீரின் மீது அன்பில்லை.
கடலுக்கு அலை மீது அன்பில்லை.
அலைக்கு காற்று மீது அன்பில்லை.
காற்றுக்கு மரம் மீது அன்பில்லை
மரத்துக்கு மழை மீது அன்பில்லை.
மழைக்கு நிலம் மீது அன்பில்லை.
இதையெல்லாம் எண்ணும் போது
இருப்பதன் பெயரே அன்பில்லை.
அழகான வார்த்தையில்
சொல்லப்போனால்
" அன்னை " க்கும் அன்பில்லை.
அட, அந்த ஆண்டவனுக்கும் அன்பில்லை.
அன்னையின் அன்புக்கு பின்
ஆங்கில " மதம் " இருந்தது.
ஆண்டவன் அன்புக்கு பின்
இந்திய " மதம் " இருந்தது.
பிரதிபலன் இல்லாத அன்பு
சாத்தானுக்கும் கூட
சத்தியமாய் கிடையாது.
எல்லாவற்றின் மீதும்
எனக்கு அன்புண்டு
என்பவரெல்லாம் வாருங்கள்.
உண்மை சொல்லும் நேரமிது
உறங்காமல் கேளுங்கள்.
உங்கள் உயிரின் மீதில்
உங்கள் பற்றுதலின்
பண்டமாற்றுதலின்
பவித்திரமான பெயர்தான் அன்பு.
காதலில் அன்பில்லை - அது
காமம் என்னும் பண்டமாற்று.
பிள்ளை மீது அன்பில்லை - அது
முதுமை பாதுகாப்பின் பண்டமாற்று.
குடும்பம் மீது அன்பில்லை. - அது
சமூக பெயர் தேடலின் சரியான பண்டமாற்று.
உலகின் பிரதிபலன் பாராது
எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும்
பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது
ஒன்றே ஒன்று. ஆனால் உன்னதமான ஒன்று.
யாருக்குமே பிடிக்காது. ஆனால்
அதற்கு நம்மை பிடிக்காமல் போகாது.
ஆமாம்.
சரவணனை கடைசி நாளில்
தனக்குள் வாங்கி மூடிக் கொண்டது.
என்னை விழுங்க அன்புடன் தன்னை
தயாராக வைத்திருப்பது.
மண்ணை வணங்கிடும் மயக்கத்துடன்
கவிதாயினி எழில் விழி
# கலைகளின் முகவரி காதல் மட்டுமே #
உலகம் நோக்கும் பல வழிப்பாதை.
உணர்ந்து பார்த்தால் ஒரு வழிப்பாதை.
வியந்து பார்க்கும் வீணர்களாலே
விவரிக்க இயலா இரு வழிப்பாதை .
அனுபவம் என்பது கடவுள் என்றான்.
அனுபவிப்பதென்பது பூசாரித்தனமோ?
வேடிக்கை வார்த்தை வேண்டவே வேண்டாம்
விபரம் சொல் விரிவாக என்றேன்.
திருடுவது ஒரு கலையே என்றான்
திருடி வந்து காட்டென சொன்னேன்.
கருத்துச்சங்கிலி திருடிச்சென்றதை
காலையில் வந்து திருப்பித்தந்தான்.
உழைப்பது ஒரு கலையே என்றான்.
உழைத்து வந்து காட்டென சொன்னேன்.
இடுப்புக்கொடி ஒன்று எடுத்து வந்தான்.
முகர்ந்ததில் தெரிந்தது உழைப்பின் வாசம்.
வீரம் என்பதும் கலையே என்றான்.
வீரம் செயலில் காட்டென சொன்னேன்.
எய்ட்சில் இறந்த எதிர் வீட்டுக்காரியை
எடுத்து சென்று எரித்து வந்தான்.
சிரிப்பென்பது கலையில் சிறந்தது என்றான்.
சிரித்துக் காட்டியதில் தெரிந்து கொண்டேன்.
அழுகை என்பதும் கலையே என்றான்
அழுது காட்டினேன். துடைத்து விட்டான்.
காதல் என்பதும் கலையே என்றான்.
காதலிக்கும் எனக்கு தெரியும் என்றேன்.
காமம் என்பதும் கலையே என்றான்.
கல்யாணம் முடிந்து காட்டு என்றேன்.
தோல்வி என்பதை கலையில் சேர்த்தான்.
ஒற்றை முத்தத்தில் ஜெயிக்க வைத்தேன்.
மகிழ்ச்சி என்பது கலையே என்றான்
மஞ்சள் கயிறு பிடுங்கி மறைத்து வைத்தேன்.
கொள்ளை என்பது கலையே என்றான்.
இல்லை என்று சிரித்து சொன்னேன்.
இடுப்புத்தாவணி கொள்ளை போனதில்
விடிந்த பிறகே ஒத்துக் கொண்டேன்.
இறப்பு என்பதும் கலையே என்பதை
எடுத்துக் காட்டி இறந்தவனே,
படைப்பு என்பது கலைதான் என்று
கருவாய் வந்து என்னில் பிறக்கிறான்.
அனுபவங்களின் அடையாளம்
நெற்றிச்சுருக்கம் எனில்
இரண்டு மட்டுமே எனக்கு சொந்தம்.
மூன்று முதல் ஏழு வரை
அடேய் சரவணா ................
அவை யாவும் உனக்கே சொந்தம்
கலைகளை காதலிக்கும்
கவிதாயினி எழில்விழி.
# பூத்தது பூந்தோப்பு #
என் ஏஞ்சல்
இன்று முதல்
ஏஞ்சலினா
என்று
அழைக்கப்படுவதாக.
ஆமென்.
என் பாசமுள்ள
பெண்குட்டி
இன்று முதல்
பாரிஜாத பூவாக
மாறக் கடவதாக.
ஆமென்.
என்
காவியங்களின்
கருவாச்சி
இன்று முதல்
கருப்பு வைரம்
ஆகக் கடவதாக.
ஆமென்.
என்
ஆசைகளின்
இளவரசி
இன்று முதல்
ராஜகுமாரி
ஆகக்கடவதாக
ஆமென்.
என்
நேசங்களின்
இளைய மகள்
இன்று முதல்
இன்ப மகள்
ஆகக் கடவதாக
ஆமென்.
என்
விழி முழுதும்
நிறைந்த மகள்
இன்று முதல்
என் விழிகளாய்
மாறக் கடவதாக
ஆமென்.
என் தாகங்களின்
நீருற்று
இன்று முதல்
திராட்சைக் கிணறாக
ஆகக் கடவதாக
ஆமென்.
நான்
சுமந்த சிலுவைகள்
இன்று முதல்
தெர்மோ கோல்
சிலுவைகளாக
மாறக் கடவதாக.
ஆமென்.
பாசமுடன்
கவிதாயினி எழில்விழி.
# தோல்வி #
இதோ,
எப்போதும் நோ்மறை
சிந்தனைகளின் வழியே
செல்லும் குதிரையின்
சேணம் அகற்றி
விரும்பிய படி
பாயச் சொல்லும்
விந்தையான வழி.
உறவுகள், பெற்றோர்
உண்மை நட்புகள்
ஊரார்களும் கூறார்.
ஒரு ஒப்பற்ற பாடம்
சொல்லித் தரும் காலம்,
வெற்றியின் விரல் விட்டு
வெளியேறும் இக்காலம்.
சுதந்திரத்தின் திறவுகோல்.
வெற்றியின் பின் வாசல்
காற்றின் சுகந்தம்
சாக்கடையில் சந்தணம்
சந்தம் மீறிய நாட்டுப் பாடல்
சத்தியமாய்
அதுவே நம் தேசீய கீதம் .
குனிவதற்கல்ல தோல்வி
குட்டுவதற்கல்ல தோல்வி
குழைவதற்கல்ல தோல்வி
குறுகுவதற்கல்ல தோல்வி
கும்பிடப்படுவதற்கே தோல்வி
கும்பிட்டுப் பார்
வெற்றிக்கே அளிக்கலாம்
ஒரு தோல்வி.
வாழ்க்கைப் பாடம்
வாலிபப்பாடம்
வலிகளின் பாடம்
வழிகளின் பாடம்
விழிகளின் பாடம்
வித்தியாசப் பாடம்.
தோல்விகளின் பாடம்
படித்துப் பாருங்கள்.
வெற்றிகளின் வில்லங்கத்தில்
வீரியங்கள் குறைந்து விடும்.
தோல்வி.
பெறுபவன் அதிர்ஷ்டசாலி.
குருடனான பின்புதான்
கண்ணப்பன் கடவுளை
சேர்ந்தான்.
என்னப்பன் துணை நிற்பான்.
எழுந்து வாருங்கள்
வாழ்வை
எதிர்கொள்வோம்.
தோல்வியில் துணிவுடன்
கவிதாயினி எழில்விழி.
# நெருப்பின் காதல்கள் #
வியர்வையின் வாசத்திற்கு
இரவு பகல் வித்தியாசம் காட்டுகிறாய்.
பகலில் உழைப்பின் வாசம்.
இரவில் ஊடலின் வாசம்.
கோழிகளின் கொக்கரிப்புக்கு
கோலமே போட்டுக் காட்டும் உனக்கு - இந்த
காளியின் கத்தல்களில் உள்ள
காதல் தெரியாதா என்ன?
வார்த்தைகளின் நிறம் உறிஞ்சி
வாசலில் விட்டெறிகிறாய் - அது
வண்ணங்களில் குளித்தெழுந்து
வாசல் திறக்கும் போதெல்லாம்
வானவில்லாகி சிரிக்கிறது.
நீ பேசாத வார்த்தைகளை எல்லாம்
மெளனம் தன் மொழியாக்கி கொண்டது.
கவிதையோ? காவியமோ?
பெயர் வைப்பது உன் பாடு
ஏரிக்கரை ஆல மரம் நீ
கரை தாண்டி கிளை விரித்து
நீர் தாண்டி வேர் வளர்த்து
கம்பீரமாய் நிற்கிறாய்
கூடடையும் ஆவலுடன் வருகிறேன்.
உன் நினைவுகளை சுமந்தபடி.
விலாங்கு மீனென்று
பாம்புக் கறி தந்தவன் தானே,
தண்ணீருக்குள் நானழுகிறேன்.
மீன்களுக்கு கண்ணீர் துடைக்கிறாய்.
அடேய் சரவணா ...........
நெருப்புக்குச்சி உன்னை
என்னில் ஒரு முறை நனைத்துக்கொண்டேன்.
தீப்பெட்டி நான் - இப்போது
எரிந்து கொண்டிருக்கிறேன்.
நெருப்பு சுடாத காயங்களுடன்
கவிதாயினி எழில்விழி.
# மழை #
அடேய் சரவணா .........
இன்று மழை பெய்தால்
நன்றாக இருக்கும் தானே?
கேட்ட கொடுமைக்கு
பிடித்து மடியிருத்தி
மழைக்கவிதை ஆரம்பிக்கிறாய்
சக்கரவாகங்கள் குடித்துச்செரித்து
வெளியிடும் எச்சில்கள்
பூமியை நனைக்கும் போது
நீங்கள் அதற்கு மழையென்று
பெயரிட்டு அழைக்கிறீர்கள்.
நீர் வற்றிய குளத்துச்சேற்றில்
உயிர்ச்சமாதி ஆகிச்செத்த
மீன்களின் கண்ணீர்
மீண்டும் பெய்து முட்டை நனைத்து
உயிரை உயிர்ப்பிக்கும் உயிர் நீராய்
பெய்வதை நீங்கள்
மழையென்று அழைக்கிறீர்கள்.
அடப்போடா.......
மடியிலிருந்து திமிறி எழுந்து
உன்னை மடியிருத்தி கொள்கிறேன்.
மழைக் கவிதை கேட்டால்
மழை தத்துவம் சொல்கிறாய் மடையா ...
மழை இயல்பானது.
உன் சிரிப்பைப் போல
உன் நடையைப் போல
உன் கிண்டல் போல
உன் காதல் போல
உன் பார்வைக்குறும்பில்
நான் பருவமடைந்ததைப்போல
மழை இயல்பானது.
விருப்பமில்லா திருமணத்தின்
முதலிரவு கனவின் போது
சொல்லப்பட்ட முத்தலாக் அது.
முதல் தலாக்கில் மேகக்கதவு திறந்து
மறு தலாக்கில் விண்வழி பறந்து
கடைசி தலாக்கில் உன்னைத் தொட்டு
பின் மண்ணைத் தொட்டு
முக்தி அடைந்த என் கண்ணீர் போன்றது.
முகத்திரை இல்லாமல் வரும்
என்னை நனைத்து மகிழ்ந்தது
நேற்று பெய்த அந்திமழை .
இன்று ஏமாறப்போகிறது
முகத்திரையுடன் நடக்கும் என்னை
இன்றும் நனைத்து மகிழ்கிறதே.
அடையாளம் என்ன?
திரும்பிப் பார்க்கிறேன்.
நேற்றைப் போலவே
பின்னால்தான் வருகிறாய்.
கண்களை மூடித்தான்
மழைப்பேச்சு பேசினேன்.
இதோ மழையில் நனைகிறேன்.
மடியை விட்டு எழுந்திருடா ....
உன் வியர்வை துடைத்து விட்டு
நான் வீட்டுக்கு கிளம்பணும்.
மாலையிலாவது மழை வேண்டி
கவிதாயினி எழில்விழி.

திங்கள், 24 ஏப்ரல், 2017

# இறுதிப்போட்டி #

ஜெயிப்பதில்தான் நமக்குள்
அனுதினம் போட்டி .
ஆனாலும் கூட ஒருபோதும்
கொடுப்பதில்லை நாம் பேட்டி.

நினைவுகளால் என்னை வதைப்பதில்
தினம் தினம் உனக்கே வெற்றி.
நினைவுகளில் உன்னை சுமப்பதில்
என்றைக்கும் எனக்கே வெற்றி .

என்னை படுத்திப்பார்ப்பதில் நீ தினமும்
ஜெயிப்பதில் எனக்கு வருத்தமில்லை.
உன்னை உடுத்திப்பார்ப்பதில் நான்
ஒரு நாளும் தோற்பதே இல்லையே.

பள்ளித்தேர்வுகளில் நீ ஜெயித்ததாக
உன் மார்தட்டி குதூகலிக்கிறாய்.
என் தவறால்தான் நீ ஜெயித்தாய்
அதனால் ஒரு முறை என் மார்தட்டி
மறுபடியும் நீ ஜெயித்துக் கொள்.

என் பருவங்களின் வெற்றியில் உன்
பார்வைக்கு பங்குண்டு
உன் பார்வைகளின் வெற்றியில் என்
பருவங்களுக்கு பங்குண்டு.

உழவில் ஜெயிக்கிறாய்,
உறவில் ஜெயிக்கிறாய்.
உளறலில் ஜெயிக்கிறாய்.
அட உறங்காத ஜென்மமே
இதோ, ஊடலிலும் ஜெயிக்கிறாய்.

வாழ்க்கையை ஜெயிக்கிறாய்
வறுமையை ஜெயிக்கிறாய்.
வராமல் வந்த வனிதை என்
தோள் தொட்டு - அட
அந்த முத்தங்களையும் ஜெயிக்கிறாய்.

எனக்கும் உனக்குமான
அத்தனை போட்டிகளிலும்
ஜெயிப்பது நீயானாலும்
விட்டுக்கொடுத்ததால்
வென்றவள் நானானேன்.

அடேய் சரவணா .........
வீம்பு கொண்டு நீ ஜெயித்த ஒன்று
விட்டுக்கொடுக்காமல்
நான் தோற்ற ஒன்று.
உனக்கு நேற்று வந்தது
எனக்கு நாளை வருவது.

நாம் என்பது எப்போதும் தோற்பது
வாழ்க்கை என்பது என்றுமே ஜெயிப்பது.

தோல்விகளுடன்
கவிதாயினி எழில்விழி.

ஞாயிறு, 26 மார்ச், 2017

# அபச்சாரமல்ல..... விபச்சாரம் #

கற்புக்கரசிகளின் பெயர்களால் கற்புக்கு
கால்காசும் பயனில்லை என்ற பிறகு தான்
அகலிகை போன்ற எங்கள் பெயர்களை
அழகுக்கரசிகள் ஆக்கிக் கொள்வோம்.
வியாபாரத்திற்கு மட்டுமல்ல,
விளம்பரத்துக்கும் பெயர் முக்கியமல்லவா?

எங்களின் இரவுகளில் உங்கள்
வியாபாரம் முடிந்த பிறகு
மகா தத்துவங்கள் சொல்லாதீர்கள்
மடையர்களே,
மனித தத்துவங்களில் நாங்கள்
மாஸ்டர் டிகிரி வாங்கியவர்கள்.

தாயாய் நினைத்து
மார்பில் கவிழ்ந்தவனும்
தாரமாய் நினைத்து
மார்பை பிசைந்தவனும்
விபச்சாரம் முடிந்த பின்பு
எங்கள் தொடுகை அபச்சாரம்
என்னும் போது உங்களை நினைத்தால்
அய்யோ ................... பாவம்.

எங்கள் அலங்காரம் கலைக்கும் முன்பே
உங்கள்அகங்காரம் கரைக்கத் தெரியும்.
நீங்கள் மண்புழுவா? மலைப்பாம்பா ?
என்பதில் இருக்குது அந்த சூத்திரம்.
அதை சொல்வதற்குள் ஏனிந்த ஆத்திரம்.?

வெளிச்சத்தில் சிரிப்பதால்
எங்களுக்கு நட்டமுமல்ல.
இருட்டில் அழுவதால்
உங்களுக்கு லாபமுமல்ல.
எப்படியும் விடிந்து விடும் - உயிர்
ஒழுகி விட்டால் முடிந்து விடும்.

தேவாரம் பாடும் வாய் கூட
அரிதார நேரத்து கலவியில்
ஆரவாரம் செய்யலாம் .
திருவாசகம் பாடும் வாயில்
தெருவாசகமும் பாடலாம்.
ஆமாம்.
மாணிக்க வாசகன் இருக்கும்
மனதின் மறுபுறம் வாத்ஸாயனனை
மறைத்து வைத்திருப்போம்.
இந்த இடத்தில் வந்தேறிகளுக்கு
வரவேற்பில்லை.

விலைவாசி உயர்ந்ததென்று
விலை உயர்த்தப்படக்கூடாத
பட்டியலில் இருந்து
விபச்சாரத்தை நீக்கி விடுங்கள்.
இங்கு முதல் என்பது எங்கள் உடல் .
முடிவென்பது எங்கள் உயிர்.
இடையில் இருப்பது மானம்.
அதற்காகவேனும் உயர வேணும்
எங்கள் வருமானம்.

முத்திரைத்திருடர்கள் நாங்கள்.
மூத்திரச்சந்திலும் முயங்க
தயாராய் நீங்கள்.
திருந்தத்தயாராய் நாங்கள்.
பொது வெளியில் கை குலுக்க
வேண்டாம்.
ஒரு சிநேகப்புன்னகையுடன்
கடந்து போக தயாரா நீங்கள்?

கவிதாயினி எழில்விழி.

சனி, 25 மார்ச், 2017

# அறிமுகம் . #

நான் பிறக்கும் போது உன்  அறிமுகம்
எனக்கு தேவைப்பட்டிருக்கவில்லை.
காரணம்
எனக்கு அறிமுகமாக வேண்டி நீ
எனக்கு முன்பே பிறந்திருந்தாய்.

எனக்கான நிறங்களின் அறிமுகம்
நீ வானவில்லுடன் வந்த போது தான்
நிகழ்ந்தது.
என் பருவங்களுக்கான அறிமுகம்
உன் பார்வைகளில் நிகழ்ந்தது.

என் காதல் பசிக்கான அரிசியில்
உன் பெயர் எழுதியிருப்பதை
அறிமுகம் செய்ததே - நீ
எனக்கு செய்த ஆகச் சிறந்த அறிமுகம் .

ஆசிரியர் ஆகாயம் அறிமுகம் செய்தார்.
ஆனால் நீயோ நிலவு வரை
கூட்டிச்சென்றும் இடமில்லை என்று வந்து
இரவுச்சந்திப்புக்கென்று
இலந்தைக் காட்டை அறிமுகம் செய்தாய்.

யவனராணியை அறிமுகம் செய்த மறுநாள்
நான் கடல்புறா வாய் மாறியிருந்தேன்.
பொன்னியின் செல்வன் அறிமுகம் செய்தாய்.
குந்தவைக்கு வந்தியத்தேவனாய்
எனக்குள்ளே அறிமுகம் ஆனாய்.

வால்காவில் தள்ளி விட்டு நீச்சல்
அறிமுகம் செய்தாய்.
கங்கை வந்து சேரும் போது
வாரி எடுத்து கரை சேர்த்தாய்.
உமர்கயாமும், கலீல் ஜிப்ரானும்
உன்னிரு பக்கத்தில்
உதவிக்கு நின்றிருந்தார்கள்.
ஆமாம். உன் உதவியாளர்களாகத்தான்
அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

ஒடிசியில் ஆரம்பித்து - உள்ளுர்
ஒப்பாரி வரை அறிமுகம் செய்தாய்.
இலியட் அறிமுகம் முடியுமுன்பே - உலக
இலக்கிய அறிமுகம் நிகழ்த்தி விட்டாய்.

உன் இத்தனை அறிமுகங்களிலும்
எனக்கு பிடித்ததை சொல்லட்டுமா?
உச்சி தொடங்கி பாதம் வரை
ஒவ்வொரு நாளும் இடும் முத்தத்திற்கு
தினம் ஒரு புதுப்பெயர் சொல்லி
அறிமுகம் செய்வாயே. அதுதான்.
இந்த அறிமுகத்திற்கு ஒரு போதும்
முற்றுப்புள்ளி நீ வைத்ததே இல்லை.

அடேய் சரவணா .........

இறப்பென்பது உயிர் துறப்பென்று
எனக்கு அறிமுகம் செய்தவர் பலருண்டு.
இறப்பென்பது இழப்பென்று எனக்கு
அறிமுகம் செய்ததில் சிறந்தவர்
உன்னைத்தவிர யாருண்டு?

கவிதாயினி எழில்விழி.
# அறிமுகம் . #

நான் பிறக்கும் போது உன்  அறிமுகம்
எனக்கு தேவைப்பட்டிருக்கவில்லை.
காரணம்
எனக்கு அறிமுகமாக வேண்டி நீ
எனக்கு முன்பே பிறந்திருந்தாய்.

எனக்கான நிறங்களின் அறிமுகம்
நீ வானவில்லுடன் வந்த போது தான்
நிகழ்ந்தது.
என் பருவங்களுக்கான அறிமுகம்
உன் பார்வைகளில் நிகழ்ந்தது.

என் காதல் பசிக்கான அரிசியில்
உன் பெயர் எழுதியிருப்பதை
அறிமுகம் செய்ததே - நீ
எனக்கு செய்த ஆகச் சிறந்த அறிமுகம் .

ஆசிரியர் ஆகாயம் அறிமுகம் செய்தார்.
ஆனால் நீயோ நிலவு வரை
கூட்டிச்சென்றும் இடமில்லை என்று வந்து
இரவுச்சந்திப்புக்கென்று
இலந்தைக் காட்டை அறிமுகம் செய்தாய்.

யவனராணியை அறிமுகம் செய்த மறுநாள்
நான் கடல்புறா வாய் மாறியிருந்தேன்.
பொன்னியின் செல்வன் அறிமுகம் செய்தாய்.
குந்தவைக்கு வந்தியத்தேவனாய்
எனக்குள்ளே அறிமுகம் ஆனாய்.

வால்காவில் தள்ளி விட்டு நீச்சல்
அறிமுகம் செய்தாய்.
கங்கை வந்து சேரும் போது
வாரி எடுத்து கரை சேர்த்தாய்.
உமர்கயாமும், கலீல் ஜிப்ரானும்
உன்னிரு பக்கத்தில்
உதவிக்கு நின்றிருந்தார்கள்.
ஆமாம். உன் உதவியாளர்களாகத்தான்
அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

ஒடிசியில் ஆரம்பித்து - உள்ளுர்
ஒப்பாரி வரை அறிமுகம் செய்தாய்.
இலியட் அறிமுகம் முடியுமுன்பே - உலக
இலக்கிய அறிமுகம் நிகழ்த்தி விட்டாய்.

உன் இத்தனை அறிமுகங்களிலும்
எனக்கு பிடித்ததை சொல்லட்டுமா?
உச்சி தொடங்கி பாதம் வரை
ஒவ்வொரு நாளும் இடும் முத்தத்திற்கு
தினம் ஒரு புதுப்பெயர் சொல்லி
அறிமுகம் செய்வாயே. அதுதான்.
இந்த அறிமுகத்திற்கு ஒரு போதும்
முற்றுப்புள்ளி நீ வைத்ததே இல்லை.

அடேய் சரவணா .........
இறப்பென்பது உயிர் துறப்பென்று
எனக்கு அறிமுகம் செய்ய பலருண்டு.
இறப்பென்பது இழப்பென்று எனக்கு
அறிமுகம் செய்ய
உன்னைத்தவிர யாருண்டு?

கவிதாயினி எழில்விழி.

வெள்ளி, 24 மார்ச், 2017

# அய்யனாரும் அருளாடியும் #
பத்து வருசத்துக்கு பின்னால
எல்லை காவல் அய்யனாருக்கு
பங்குனில கொடை எடுக்கணுமாம்.
தகவல் வந்திருக்கு
அய்யனாருக்கும் எனக்கும் இடையில
கணக்கு ஒண்ணு தீக்கணும் -அதுக்கு
கண்டிப்பா நான் போகணும்.
அய்யனாரு அருளாடி அங்கமுத்து
அண்ணன் மவ செல்லம்மாவும்
கீழத்தெரு அம்பட்டன் மவன்
அழகுராசாவும் காதலிக்கறதா
ஊருக்குள்ள அப்ப ஒரு பேச்சு உண்டு.
உண்மைதான்னு எனக்கும் தெரியும்.
செல்லம்மா எங்கிட்ட மறைக்க மாட்டா.
எலந்தக்காட்டு இருட்டுல இவங்க
பேசிட்டு இருந்தாங்க.
தூரத்து ரெயில் வெளிச்சத்துல
அங்கமுத்து பாத்துட்டதா
செல்லம்மா தான் எனக்கு சொன்னா,
இரண்டு பேரும் இணைஞ்சதா
ஊருக்கு சொன்னது இந்த
அய்யனாரு அருளாடிய அன்னிக்குத்தான்.
சனங்க இடம் கேட்டதுக்கு
அய்யனாரு சொன்னாரு,
மாட்டுத்தடம் வழி போனா
ஏரிக்கு நடுவுல உள்ள
ஆலமர மணல் திட்டுல ன்னு
அய்யனாரு பொய் சொன்னாரு.
அடுத்த நாள் இரண்டு பேரும்
அந்த ஆலமரத்துல
நாண்டுகிட்டு செத்துட்டாங்க.
அய்யனாரு உண்மை சொன்னதா
அருளாடி பீத்திக்கிட்டாரு.
அடுத்த வருடம் அதே இலந்தைக்காடு
அதே ரயில் வெளிச்சம்
அதே அங்கமுத்து
ஆனால்
நாங்க இணைஞ்சது மட்டும் நிசம்.
கொடை விழாவுல ஒரு ராணுவ ரகசியமா அய்யனாரு சொன்னதா
அருளாடிதான் சொன்னாரு.
அந்த ஆலமரம் தான் இதுக்கும் சாட்சியாம்.
அங்கதான் புடிச்சது அய்யனாருக்கு சனி
உண்மைய தெரிஞ்சிக்கணும்
ஊரு சனம் சாட்சி வேணும்.
கொண்டா மூணு கற்பூரம்
கைய நீட்டிக்குவோம்.
எழில் விழிக்கு ஒண்ணு.
சரவணனுக்கு ஒண்ணு
மன்னிச்சிக்க அய்யனாரே.
உன் அருளாடிக்கும் ஒண்ணுன்னேன்.
அடிடா மேளத்த, ஏத்துடா சூடத்த .......
அன்னிக்கு மலையேறுன அய்யனாரு
அதுக்கு பிறகு வரவேயில்ல.
இந்த பங்குனிக்கு போகணும்
அய்யனார மன்னிச்சிட்டேன்னு
அவருகிட்ட ரகசியமா சொல்லவும்
அய்யனாரே மன்னிச்சிடுன்னு
அவருகிட்ட பகிரங்கமா சொல்லவும்
கொடை விழாவுக்கு போகணும் .
யாரெல்லாம் வர்றீங்க.?
கவிதாயினி எழில் விழி.
# உனக்கொரு பிள்ளைத்தமிழ். #
அடேய் சரவணா. ........
எதுகை நான் எதற்கும் தயாராக . 
மோனை உன் மோகனப் பார்வையில்
அணிகள் இல்லாமல் ஆயத்தமாகி
இரட்டுற மொழியப்போகிறேன். _ அதற்கு ஒரு யாப்பிலக்கணம் எழுதலாம் வா.....
எழுவாயாய் என் வாய் ஏங்க
பயனிலையாய் உன் பார்வையில்
செயப்படு பொருளை இருவரும்
பயப்படாமல் எழுதலாம் பறந்தோடி வா.
தளை பிரிக்க நீ தயாராக இரு. நான்
அசை பிரித்து சற்று ஆசையுடன்
சொற்பொருள் பின்வரு நிலையணிக்காக
மற்போர் தொடர்வேன் மறுக்காமல் வா.
என்னழகிற்கு நீ வஞ்சப்புகழ்ச்சி செய்.
நான் உயர்வு நவிற்சி அணி தருவேன்.
இடக்கரடக்கல் செய்தாயானால் - எனக்கொரு
இரங்கற்பா மட்டும் எழுதவா.
இந்த பெண்பாவாய்க்காய் ஒரு
வெண்பா பாடு.
நான் ஆடை நெகிழ அகவற்பா தருவேன்.
கலிப்பா ஒன்று தமிழோடு நீ தந்தால்
வஞ்சி நானொரு வஞ்சிப்பா தருவேன் வா.
இருவரிணைந்து எழுதும் கலம்பகத்தால்
காமம் எரித்து காதல் வளர்ப்போம்.
நம் காதலைப்பாட தமிழுக்கு மட்டும்
ஆயுட்கால அனுமதி கொடுப்போம் வா.
கவிதாயினி எழில்விழி.
# எந்த நிமிடம் #
யோசித்துப்பார்க்கிறேன்.
உன் மீதான என் காதலின்
ஆரம்பத்தை .
உன்னிடமும் கேட்கிறேன்.
எப்போதும் போல் சிரிக்கிறாய்.
வயசுக்கு வருவதற்கு முதல் நாள்
வரப்பில் வழுக்கி விழுந்தயென்னை
பார்வையில் பக்கம் வந்து
முட்டி தேய்த்து சொடுக்கெடுத்த அந்த
சொர்க்க நிமிடத்திலிருந்தா?
பச்சைஓலை குடிசைகட்ட
மச்சுவீட்டு மாமங்காரன்
சீரோட வந்தப்ப எங்கிட்ட
சீராடி மொகந் திருப்பி நீ
சிரிக்காம நின்ன - அந்த
சித்திர நிமிடத்திலிருந்தா?
குடிசைக்கூடு பிரித்து
முளைத்திருந்த சிறகுக்கு
தாவணி தடுப்பு போட்டு
தண்ணீ எடுக்க நான் வந்தப்ப
தடுப்பு தாண்டி நின்னு நீ தவிப்புடன்
பார்த்த அந்த தங்க நிமிடத்திலிருந்தா?
ஊர்தாண்டி ஊர்ந்து செல்லும்
அந்த ஒற்றையடிப் பாதை வழி
நெடுஞ்சாலை பேருந்துக்காய் நான்
வருவதற்கு முன் சென்று
இருக்கை துடைத்து வைத்த அந்த
இன்ப நிமிடத்திலிருந்தா?
பார்வை முடித்து சிரிப்பு முடித்து
மெளனம் உடைத்து பேசிய நாள் முடித்து
ஜரிகையிட்ட பேப்பர் சுற்றி
நீ கொடுத்த மூக்குத்திக்கு நான்
முத்தம் கொடுத்த அந்த
முத்தான நிமிடத்திலிருந்தா?
அந்த ஒரு அதிகாலைப்பொழுதில்
ஆத்தங்கரைபிள்ளையாருக்கு
நூற்றியெட்டு தோப்புக்கரணம்
போட்டு முடித்தது ஏனென்று கேட்டதற்கு
ஜோடி மெட்டி தந்து என் ஜோடி நீயென
சொல்லிச் சென்ற அந்த
சுகம் சொன்ன நிமிடத்திலிருந்தா?
எத்தனை யோசித்தும் ஆரம்பம்
எதுவென்று புரியாமல்
உன் முகம் பார்க்கிறேன்.
வெட்கமாய் இருக்கிறதென
விழிகளை மூடிய நிமிடத்தில்
இதழோடு இதழ் இணைத்து
முத்தமிட்டு விலகிய அந்த
முத்தான நிமிடத்தியிருந்தா?
ஆரம்பமே இல்லாத
நம் காதலின் ஆரம்பம் என்னவென்று
யோசித்த நாட்களில் எல்லாமே
ஆதாமும் ஏவாளும் நம் காதலை
யாசகம் கேட்பதாக நீ சொல்லிச் சிரித்த
அந்த நொடி தான் ஆரம்பம் என்பதாய்
நீ இல்லாத இந்த பொழுதுகள்
இன்று உணர்த்திச் செல்கிறது.

கவிதாயினி எழில்விழி.
# நாளைக்கு என் வயது இருபது . #
மேலத்தெரு ஒத்தக் கண்ணன்
இப்பத்தான் சொல்லிப்போனான்.
மூணு மணிக்கு நீ வயலுக்கு வருவன்னு.
எங்கப்பஞ்சொத்துல
பொன்னி நெல் வெளஞ்சிருக்கு.
ஒங்கப்பஞ்சொத்துலயோ
சம்பா வெளஞ்சி சாஞ்சிருக்கு.
அப்பனுங்கள போலவே வரப்ப
வாய்க்கா ஒண்ண பிரிச்சிருக்கு.
என் வயலு வரப்பு மேல நானிருந்து
வாய்க்கா தண்ணில வண்ணாத்தி மீனுக்கு
வச்சிருந்த எங்காலு சூடாவே இருந்துச்சு.
சண்டாளன் நீ வந்ததுமே _ அந்த
தண்ணி கூட குளுந்துருச்சி .
அப்பனுங்க வரதுக்குள்ள
அங்ஙனயே பேசிக்கிட்டோம்.
"பொறந்த நாள் பரிசிருக்கு
பொழுதோட வந்து விடு"
"அது நாளைக்கு இப்ப என்னன்னேன்"
மடையடைக்கும் சாக்குல
மயங்கும் படி முத்தம் வச்சே .
அன்னிக்கு ஏன்தான் அந்த
அந்திமழை பெஞ்சதோ
நம்மூரு ஆத்து தண்ணி
பளிங்கு நிறம்மாறி பழுப்பாகி போச்சு.
குளிக்க நான்தான் மொதல்ல போனேன்.
ராசா நீயோ பின்னதான் வந்தே.
நெஞ்சளவு தண்ணியில நான்
கண்மூடி நின்னப்போ
கெண்ட மீனு கடிக்குதோன்னு
கால் உதறி துடிச்சப் போ
அட சண்டாளா,
எப்படா கொலுசு போட்ட?
காலில ஒண்ணும் கையில ஒண்ணுமா,
ஆச்சி. அது முடிஞ்சி வருசம் ஒண்ணு.
நாளை விடிஞ்சா எனக்கு வயசு இருவது.
மேலத்தெரு ஒத்தக்கண்ணன்
இப்பத்தான் சொல்லிப்போறான்.
மூணு மணிக்கு நீ வயலுக்கு வருவன்னு.
இன்னிக்கும் நீ மடை திறக்க
உனக்கு நான் மனம் திறந்தேன்.
"இந்த வருட பரிசு அதைவிட பெருசுடி.
ஆனா பாரு ஒண்ணுதான் கெடச்சது."
சொன்னதுமே புரிஞ்சிக்கிட்டேன்.
சண்டாளன் நீ என்ன
பெண்டாளும் முன்னால
எனக்கு ஒட்டியாணம் போட்டு
ஒத்திகை பாக்க போறேன்னு.
அடேய் சரவணா....
எனக்கும் ஆசதாண்டா.
மாரளவு தண்ணிக்குள்ள நீ
மறஞ்சபடி வந்து சேர....
ஊருக்கும் தெரியாம நான்
ஒட்டியாண அளவு காட்ட,......
அதுக்கு
பளிங்கு தண்ணி பழுப்பாக
எங்கப்பா சிவனே
பருவ மழைய அனுப்பி வைடா....
அன்னிக்கு பிறகு இன்னிக்கு வர
அந்தியில அந்த பருவ மழ
பெய்யவே இல்லயடா.
பிரியமான எம்புருசா.

கவிதாயினி எழில்விழி.

# ரெய்டு #
முகவரி சொல்லாமல் வந்தாலும்
எப்படியோ தெரிந்து கொள்கிறாய்.
எண்ணிச் சொன்ன
எண்ணிக்கைகளுக்கு இரட்டிப்பாய்
வரிதான் செலுத்தி விட்டேனே.
இப்போதென்ன " ரெய்டு "
ஆரம்பி, ஆரம்பித்து நடத்து
உன் தனி ஒருவன் ரெய்டை.
சாத்திக்கொண்ட கதவுகள்
சாட்சியங்களாகட்டும்.
மூடிக்கொண்ட என் கண்கள்
ஒவ்வொன்றையும்
திறந்து காட்டட்டும்.
சிரிக்காதே.
அறைகளை சொன்னேன்.
வரவேற்பு அறையில்
வரிகட்டாத வருமானம் இல்லையோ
தாண்டி செல்கிறாய்.
ஹாலில் பதுக்கி இருக்கலாம்.
சற்று நின்று சோதனை செய்யேன்.
பூஜையறையில் புகுந்து திரும்புகிறாய்.
சமையலறை செல்லாமல் தவிர்க்கிறாய்.
பயப்படாதே
பின்னால்தான் வருகிறேன்.
பதுக்கிய வரிகள் எல்லாம்
படுக்கையறையில்தான்
பதுங்கி இருக்கும் என்பது தான்
உங்களின் பாலபாடம் போலும்.
சோதனைச்சாலை முயல்போல
உன் கைப்பிடிக்குள் நான்.
போர்வை எடுத்தெறிகிறாய்.
மெத்தை பிய்க்கப்பார்க்கிறேன்.
வாசலில் ஆளரவம்.
ஆமாம்'
என்னைப்பெற்ற சோதனைக்காரன்.
தெரிந்தால்
இருவருக்குமே வரி கிடைக்கும்.
இப்போது கிளம்பு.
எப்பா, எம்புள்ளிராசா
பின் வாசல் திறந்துதான் இருக்கிறது.
உனக்கு செலுத்த வேண்டிய
வரிகளில் ஒன்றிரண்டு
விடுபட்டிருக்கலாம்.
இரவில் வருவேன்
இலந்தைக்காட்டுக்கு.
நீயும் வந்துவிடு.
செலுத்த வேண்டிய
மொத்த வரியையும்
முத்தமாகவே செலுத்தி விடுகிறேன்.

கவிதாயினி எழில்விழி.

# அந்த மூன்று நாட்கள். #
இறுக கரம் கோர்த்த - அந்த
முதல் நாள் இரவிலேயே
உதிரத்தின் முதல் சொட்டு - என் 
உடை நனைக்க
கோர்த்த கரம் கோர்த்தபடி - என்னை கோவிலுக்குள் தெய்வமாய்
தாங்கிக்கொண்ட - என்
கோமகனே நீ எங்கே?
அந்த மூன்று நாள் தவிர மீத
இரவுகளில் நீ என்னை
இம்சித்தாய், சுகமாக இருந்தது.
அந்த மூன்று நாள் மட்டும்
நான் உன்னை இம்சித்தேன்.
அப்போதும்
சுமை தாங்கியாய் என்னை
தாங்கிக்கொண்ட - என்
சுந்தரனே நீ எங்கே?
இரவுகளில் நானுன்னை
இடுப்பில் கிள்ளுவதையும்
இயல்பாகி நீயென்னை
இன்பத்தில் தள்ளுவதையும்
மூன்று நாள் மட்டும்
முழுதாய் நிறுத்தியவனே
என்னை முதுகிலும் சுமந்தவனே - என்
முதல் குழந்தையே நீ எங்கே?
மீத இரவுகளை இருட்டில் இருந்து
எடுத்துக் கொண்டு - அந்த
மூன்று இரவுகளை மட்டும்
வெளிச்சத்துக்கு விட்டுக்கொடுத்த
வீம்புக்கு பொறந்தவனே - என்
உடல் ஆய்ந்த விஞ்ஞானியே நீ எங்கே?
அடிவயிற்று வலி குறைக்க
அழுத்திப்பிடிக்க சொன்னால்
அந்த இடம் வலி குறைப்பாய்.
அடுத்த இடம் வலிக்க வைப்பாய்.
அழுக்குப் புடிச்சவனே, அப்புறம் போ
என்றவுடன் அழகாக சிரிப்பாயே - என்
அற்புதனே நீ எங்கே?
கொடுத்த வைத்த வாழ்வென்று
அன்னையிடம் சொல்ல வைத்தாய் .
கொடுப்பினை தந்தாய் என்று
கடவுளுக்கு தந்தி தந்தேன்.
அடுப்பங்கரை வாழ்வை
அந்த மூன்று நாள் உனக்கென
ஒதுக்கி வைத்தேன்.
இன்று குவிந்து கிடக்கிறதடா - என்
குல விளக்கே நீ எங்கே?
மாதவிடாய் முதிர்ச்சி வந்து
என் மாபாவம் தீரும் வரை - அந்த
மூன்று நாள் மட்டுமாவது - என்
ஆண் தேவதையை
அனுப்பி வைப்பாயா
ஆண்டவனே ?
# ரெம்ப வலிக்குதடா... #
கவிதாயினி எழில்விழி.