எய்ட்ஸ்,
என்பு தோல் போர்த்திய உடம்பை
எண்பது சதம் தின்று விட்டு
இருபது சதத்துடன் இடுகாடு
அனுப்பி வைக்கும்.
எய்ட்ஸ்,
மாற்றி பிறப்பதற்கும்
மருந்து கண்டு பிடித்த
மனிதன்
எய்ட்சுக்கு மருந்து கண்டு
பிடிக்கும் பொறுப்பை மட்டும்
எமனிடம் விட்டு விட்டான்
உயிர்களை எல்லாம் ஜெயித்த
எமன் எய்ட்ஸ் வந்து
இறந்து போனதாய் கேள்வி.
எய்ட்ஸ்,
ஆலம் உண்ட அப்பனையும்
அச்சத்தில் தள்ளிவிடும்.
சூலம் ஏந்தும் தாயையும்
சோகத்தில் துடிக்கவிடும்.
சித்தன் முதல் புத்தன் வரை
சொல்லி வைத்த தத்துவத்தை
காலம் போன கடைசியில்
கண்கூடாய் கட்டிவிடும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக