வெள்ளி, 24 மார்ச், 2017

# ஒப்பந்தம் #
அடேய் சரவணா ..........
அயல் நாட்டு தூதர்கள்
ஆயிரம் பேர் கூடினாலும்
ஒப்பந்தம் கையெழுத்தாவது
இருவர் கைகளில் தான்.
என் விருப்பக் கையெழுத்துடன்
உன பார்வை கையெழுத்தும் சேர்ந்து
எத்தனையோஒப்பந்தங்கள்
ஒவ்வொரு நாளும் உருவானதுண்டு.
ஓப்பந்தத்தில் கையெழுத்திட்ட
பாவத்துக்கு நீ ஒவ்வொரு
நாளும் ஒப்பந்தம் மீறுகிறாய்.
அதற்கும் உடன்படுகிறேன்.
முதல் ஒப்பந்தம் கண்ணை பார்த்து
பேச வேண்டும் என்பது.
ஒப்பந்தம் முறித்து
கழுத்துக்கு கீழும் பார்க்கிறாய்.
மறு ஒப்பந்தம் கழுத்துக்கு
கீழே பார்க்கக் கூடாது.
இப்போதும் மீறி விட்டாய்
இடுப்பைப் பார்க்கிறாய்.
இதற்கு மேல் மறு ஒப்பந்தம்
வேண்டும் என்கிறேன்.
துணிக்கு மேல் தானே பார்க்கிறேன்.
துடிப்பென்ன உனக்கு என்கிறாய்.
வேண்டாமப்பா உன் ஒப்பந்தம் .
துணிக்காக ஒப்பந்தம் போட்டால்
என்னைக் காப்பாற்ற
கிருஷ்ணன் கூட வர மாட்டான்.
வற்புறுத்தி ஒப்பந்தம் போட்டு
வன்முறை செய்து உடைக்கிறாய்.
ஒப்பந்தம் வேண்டாமென ஒரு
ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.
இனியெதற்கு ஒரு ஒப்பந்தம்?
கண்களால் கற்பழிப்பதால்
நான் கன்னி கழிந்து
விடுவேனா என்ன?
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக