# பூதங்கள் ஐந்து #
ஒவ்வொரு நாளும் புயலாகத்தான்
புறப்படுகிறேன்.
தெரு மூலை திரும்புவதற்குள்
தென்றலாக்கி விடுகிறாய்.
இதோ, எனக்கு முன்னால்
இருபதடி தூரத்தில் நீ திரும்புகிறாய்.
இலந்தை காட்டுக்கு செல்லும்
ஒற்றையடிப்பாதையில்.
புறப்படுகிறேன்.
தெரு மூலை திரும்புவதற்குள்
தென்றலாக்கி விடுகிறாய்.
இதோ, எனக்கு முன்னால்
இருபதடி தூரத்தில் நீ திரும்புகிறாய்.
இலந்தை காட்டுக்கு செல்லும்
ஒற்றையடிப்பாதையில்.
தினம்தோறும் காட்டை எரிக்கும்
கனலை சுமந்துதான் கிளம்புகிறேன்.
(இலந்தை)காட்டை அடையும் போது
கை தீபமாக்கி விடுகிறாய்.
இருபது நிமிடம் முன்னதாக வந்து
கை தீபத்தை அணைக்க
காத்திருக்கிறாய்.
இதோ அணைத்துக் கொள்.
திரும்பும்போது தீபத்தை
ஏற்றி அனுப்புவாய்தானே?
கனலை சுமந்துதான் கிளம்புகிறேன்.
(இலந்தை)காட்டை அடையும் போது
கை தீபமாக்கி விடுகிறாய்.
இருபது நிமிடம் முன்னதாக வந்து
கை தீபத்தை அணைக்க
காத்திருக்கிறாய்.
இதோ அணைத்துக் கொள்.
திரும்பும்போது தீபத்தை
ஏற்றி அனுப்புவாய்தானே?
கூதல்காற்று, குளிர்காற்று
வாடைக்காற்று, வறண்ட காற்று
எல்லாக் காற்றுக்கும்
இப்போது ஒரேபெயர் தான்
ஓடைக்காற்று,
இதோ, எனக்கு முன்னால் நீ
இருபதடி தூரத்தில் குளிக்கிறாய்.
உன்னை தாண்டி வரும் இந்த
மார்கழி நீர் கூட எனக்கு
கதகதப்பாய் இருக்கிறது.
வாடைக்காற்று, வறண்ட காற்று
எல்லாக் காற்றுக்கும்
இப்போது ஒரேபெயர் தான்
ஓடைக்காற்று,
இதோ, எனக்கு முன்னால் நீ
இருபதடி தூரத்தில் குளிக்கிறாய்.
உன்னை தாண்டி வரும் இந்த
மார்கழி நீர் கூட எனக்கு
கதகதப்பாய் இருக்கிறது.
உன் தீபாவளி பட்டாசுகளை
நான் அதிர பதற வெடிக்கிறாய்.
வெடிச்சத்தம் எல்லாமே
என் பெயராய் கேட்கிறது.
போதும் என்ற என் ஜாடைக்கு பின்
நீ அனுப்பிய ராக்கெட் வெடி
ஆகாய மார்க்கமாய்
அடுத்த கிரகம் சென்ற
இருபது நிமிடம் கழித்து
வந்த மேகங்கள்
என் பெயரை தாங்கி வந்ததை
காட்டிச் சிரிக்கிறாய்.
நான் அதிர பதற வெடிக்கிறாய்.
வெடிச்சத்தம் எல்லாமே
என் பெயராய் கேட்கிறது.
போதும் என்ற என் ஜாடைக்கு பின்
நீ அனுப்பிய ராக்கெட் வெடி
ஆகாய மார்க்கமாய்
அடுத்த கிரகம் சென்ற
இருபது நிமிடம் கழித்து
வந்த மேகங்கள்
என் பெயரை தாங்கி வந்ததை
காட்டிச் சிரிக்கிறாய்.
உன் வீட்டுக்கொல்லையில்
பூனை பிடிக்க பள்ளம் வெட்டி
யானை நீ விழ காத்திருந்தேன்.
இருபது நிமிடம் கழித்து தான்
சத்தம் கேட்டது.
ஓடி வந்து பார்க்கிறேன்.
நீ நட்டிருந்த வாழைக்கன்று
இருந்த இடத்தில்
நான் வெட்டியிருந்த யானைக்குழி
மூடப்பட்டிருந்தது.
பூனை பிடிக்க பள்ளம் வெட்டி
யானை நீ விழ காத்திருந்தேன்.
இருபது நிமிடம் கழித்து தான்
சத்தம் கேட்டது.
ஓடி வந்து பார்க்கிறேன்.
நீ நட்டிருந்த வாழைக்கன்று
இருந்த இடத்தில்
நான் வெட்டியிருந்த யானைக்குழி
மூடப்பட்டிருந்தது.
அடேய் சரவணா ...........
புறப்பூதங்கள் ஐந்தையும்
ஆட்கொண்டிருப்பதாய்
என்னிடம் நீ
பீற்றிக்கொள்ளலாம்.
இருபது வயதில்
உன் அகப்பூதங்கள் ஐந்தையும்
என்னிடம்
அடகுவைத்து சென்றாயே.
அதை மட்டும்
மறந்து விடாதே.
புறப்பூதங்கள் ஐந்தையும்
ஆட்கொண்டிருப்பதாய்
என்னிடம் நீ
பீற்றிக்கொள்ளலாம்.
இருபது வயதில்
உன் அகப்பூதங்கள் ஐந்தையும்
என்னிடம்
அடகுவைத்து சென்றாயே.
அதை மட்டும்
மறந்து விடாதே.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக