அக்னிகுஞ்சொன்று கண்டேன்.- அதை
அப்துல் கலாமின் நெஞ்சிடை வைத்தேன்.
விண்ணில் உயர்ந்தது என் வீடு. - கண்டு
வெந்து தணிந்தது பிறன் நாடு.
வெற்றி எட்டு திக்குமெட்ட கொட்டு முரசே,
காலம் தந்த கலாம் இன்று என்
கண்ணன் ஆகி விட்டான், - நான் அவன்
கண்ணம்மா ஆகி விட்டேன் என்று கொட்டு முரசே!
மங்கியதோர் நிலவெனக்கு கனவினை தந்தது. -
கலாமுக்கோ தன்னையே தந்தது. அதனால்
காற்று வெளியிடையில் தூது அனுப்பி கலாமின்
கரம் பற்றி தன் காதலை வெற்றி கொண்டது.
ஓடி விளையாடு பாப்பா, கலாமின்
கால்தடம் பற்றியடிஎன் பாப்பா.
கூடி விளையாடு பாப்பா - அவன்
குலம் விளங்க வேணுமடி பாப்பா!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே - கலாமின்
காலத்திலேயே நாம் வாழ்ந்து விட்டோமென்று.
பாரதத்தின் பகைவனுக்கு பாசக்கயிறு தந்தவனை அன்னை
பராசக்தி முகம் பார்த்து விட்டாளென்று !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக