# நினைவுச் சிலுவை #
என்னுடைய சிலுவையில்
ஏராளமான பக்கங்கள்.
ஒவ்வொரு பக்கங்களிலும்
அநேகம் பேர்கள்
தத்தமது நினைவு ஆணிகளால்
என்னை அறைந்தனர்.
ஏராளமான பக்கங்கள்.
ஒவ்வொரு பக்கங்களிலும்
அநேகம் பேர்கள்
தத்தமது நினைவு ஆணிகளால்
என்னை அறைந்தனர்.
மரணத்தை அழைக்காமல்
மவுனமாய் காத்திருக்கிறேன்.
அவற்றில் சில ஆணிகள்
துருப்பிடித்து உதிர்ந்து போயின.
சில ஆணிகளை அடித்தவர்களே
பிடுங்கியும் போயினர்.
மவுனமாய் காத்திருக்கிறேன்.
அவற்றில் சில ஆணிகள்
துருப்பிடித்து உதிர்ந்து போயின.
சில ஆணிகளை அடித்தவர்களே
பிடுங்கியும் போயினர்.
இப்போதும் காத்திருக்கிறேன்.
எதிர்கொண்டழைக்க யாருமில்லை.
அன்புடன் அணைக்க சில
யூதாஸ்கள் தேவை.
நம்பிக்கையில் ஓடம் செலுத்த
சில பேதுரு களும் தேவை.
எதிர்கொண்டழைக்க யாருமில்லை.
அன்புடன் அணைக்க சில
யூதாஸ்கள் தேவை.
நம்பிக்கையில் ஓடம் செலுத்த
சில பேதுரு களும் தேவை.
நயவஞ்சக வலை விரியுங்கள்.
நலம் விரும்பி நான்
மாட்டிக் கொள்வேன்.
விலங்கெடுத்து பூட்டுங்கள்,
சாவியை சாவு கொடுப்பேன்.
என் ஆவியை காவு கொடுப்பேன்.
நலம் விரும்பி நான்
மாட்டிக் கொள்வேன்.
விலங்கெடுத்து பூட்டுங்கள்,
சாவியை சாவு கொடுப்பேன்.
என் ஆவியை காவு கொடுப்பேன்.
சிலுவையின் பக்கங்கள்
உறுத்தும் நேரங்களில்
என் மீது சுமத்துங்கள்.
சுமப்பது சுகமென்றே
ஒரு சுகராகம் இசையுங்கள்.
உறுத்தும் நேரங்களில்
என் மீது சுமத்துங்கள்.
சுமப்பது சுகமென்றே
ஒரு சுகராகம் இசையுங்கள்.
அடேய் ..........................
பிறந்தன இறக்கும்
இறந்தன பிறக்காது.
நீயாவது,
நான்
இரு(ற)க்கும் நாள் வரை
நல்லிசையாய் சிரிக்க
பிறர் ரசிக்க
என்னுள்
இங்கிதம் என்னும் ஆணியை
இன்பமாய் அறைந்து போ!
இறந்தன பிறக்காது.
நீயாவது,
நான்
இரு(ற)க்கும் நாள் வரை
நல்லிசையாய் சிரிக்க
பிறர் ரசிக்க
என்னுள்
இங்கிதம் என்னும் ஆணியை
இன்பமாய் அறைந்து போ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக