மீள்பதிவு.
அய்யா சரவணா ................
அடுத்த வீட்டு அன்பரசி
என்ன விட சின்னவதா.
புருசனோட போனவதா,
இப்ப புள்ள பெற வந்திருக்கா.
என்ன விட சின்னவதா.
புருசனோட போனவதா,
இப்ப புள்ள பெற வந்திருக்கா.
ஊருக்குள்ள நாமட்டும்
ஒத்தயில நிக்கிறனே,
தோப்பாக வேணுமய்யா.
தொணயிருக்க வாருமய்யா,
ஒத்தயில நிக்கிறனே,
தோப்பாக வேணுமய்யா.
தொணயிருக்க வாருமய்யா,
ஒலகம் பூரா எனக்குள்ள .
ஒன்ன மட்டும் காங்கலியே.
ஊரெல்லாம் பேஞ்சமழ
என்னமட்டும் நனைக்கலியே.
ஒன்ன மட்டும் காங்கலியே.
ஊரெல்லாம் பேஞ்சமழ
என்னமட்டும் நனைக்கலியே.
எனக்கு ஒரு மொகவரிய
எப்பவோ நீ தந்து விட்ட .
எனக்குள் ஒம்மொகவரிய
எப்ப வந்து தரப்போற?
எப்பவோ நீ தந்து விட்ட .
எனக்குள் ஒம்மொகவரிய
எப்ப வந்து தரப்போற?
பட்டுப்பொடவ கனக்குமய்யா.
கூரப்பொடவ கசங்குமய்யா .
முன்னிரவு நானுடுக்க
நடுயிரவு நீ அவுக்க
பின்னிரவு நாம
பிணையறப்போ
போத்திக்கொள்ள
ஒரு
கண்டாங்கி போதுமய்யா,
காசிருந்தா வாங்கியாங்க.
கூரப்பொடவ கசங்குமய்யா .
முன்னிரவு நானுடுக்க
நடுயிரவு நீ அவுக்க
பின்னிரவு நாம
பிணையறப்போ
போத்திக்கொள்ள
ஒரு
கண்டாங்கி போதுமய்யா,
காசிருந்தா வாங்கியாங்க.
ஒத்த மொழம் பூவு குடு
நான் ஒத்தப் புள்ள
பெத்து தாரேன்
பத்து மொழம் பூவெல்லாம்
நாஞ் சத்தியமா கேக்க மாட்டேன்.
நான் ஒத்தப் புள்ள
பெத்து தாரேன்
பத்து மொழம் பூவெல்லாம்
நாஞ் சத்தியமா கேக்க மாட்டேன்.
தங்கத்தாலி வேணுமுன்னு
சண்டாளி நாங்கேக்கலியே.
மஞ்சத்துண்டு எடுத்தாரேன்
மஞ்சக்கயிறு வாங்கியாங்க.
தங்கக்கழுத்து நாந்தாரேன்
தாலிகட்டி கூட்டிப்போங்க.
சண்டாளி நாங்கேக்கலியே.
மஞ்சத்துண்டு எடுத்தாரேன்
மஞ்சக்கயிறு வாங்கியாங்க.
தங்கக்கழுத்து நாந்தாரேன்
தாலிகட்டி கூட்டிப்போங்க.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக