வெள்ளி, 24 மார்ச், 2017

# புல்லுக்கும் உயிர் உண்டு. #
சற்று முன்தான் மலைக்கும்
மழைக்குமான சண்டை
முடிந்திருந்தது.
காட்டாற்று வெள்ளம் ஓய்ந்து
இலைகளிலும் தரைகளிலும்
திவலைகளாய் நீர்த்துளிகள்.
காணும் இடமெல்லாம்
மேடும் பள்ளமுமாய்
மிகப்பெரிய புல்வெளி
பள்ளத்தாக்கில் நிற்கிறேன்.
மலைப்பாக இருக்கிறது.
உச்சி மலை ஏறி நிற்க
மீண்டுமொரு உச்சம் வேண்டும்.
மழை முடிந்த இரவில்
ஒரு மலைச்சாலை பயணம்.
நீங்களானால் கால்களால் நடப்பீர்கள்.
என் காதல் கணவா,
நான் வேண்டுதலுக்கென்றே
என் விரல்களால் நடந்தேன்.
நெகிழும் தரையில் என்
நீண்ட பயணம்.
தடைகளை தாண்டியும்
தயங்கியே நடக்கிறது.
தடுமாறினால் பற்றிக் கொள்ள
புற்கள் மட்டுமே ஆதாரம்.
இருட்டு.
புற்களையும் கறுப்பாகவே காட்டியது.
தட்டுத்தடுமாறி தவழ்ந்தும்
நடந்தும் உன்
மார்பின் உச்சம் தொட்டேன்.
வெற்றியை கொண்டாட
இதோ மின்சாரமும்
வந்து விட்டது.
வெளிச்சத்தில் பார்த்தேன்.
அப்போதும் புற்கள்
நிறம் மாறவில்லை.
அட கண்றாவி கணவா...
.......... தொடங்கி
.......... வரை கருப்பாக
கோரைப்புற்கள் ...
# ட்ரிம் பண்ணி தொலையேன் டா .......... #

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக