வெள்ளி, 24 மார்ச், 2017

# வந்துட்டுப்போடி #
அழித்துத் தான் எழுதுகிறாய்
ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொரு நிறத்தில்.
ஐ லவ் யு.
நீண்ட போராட்டத்துக்கு பிறகே
கண்டுபிடித்தேன்.
என் தாவணிகளின்
நிறமாற்றத்தை .
அன்று தான் புதிதாய்
கொடுப்பது போல்
தினம் ஒரு முத்தம்.
நீண்ட போராட்டத்துக்கு பிறகே
கண்டுபிடித்தேன்.
நீ எடிசனின் ஆய்வகத்தில்
ஆயுட்கால
பணியாளானதை .
அன்று தான் பார்ப்பது போல்
அன்றாடம் ஒரு
புதிய பார்வை.
நீண்ட போராட்டத்துக்கு பிறகே
கண்டு பிடித்தேன்.
உன் வீட்டு செடியிலிருந்து தான்
நான் தினம் பூக்களை
திருடுகிறேன் என்பது
இன்னமும் உனக்கு
தெரியாதென்பதை,
ஆனாலும்
ஒவ்வொரு முறையும்
அட்சரம் பிசகாமல்
வரும் போதும் போகும் போதும்
மறக்காமல் சொல்லுகிறாய்
அதே வார்த்தைகளை......
போராடித்தான் கண்டுபிடித்தேன்.
வரும் போது " போடி " என்பதையும்
போகும் போது " வாடி " என்பதையும் ...
அடேய் சரவணா .....
நான்
வரட்டுமா?
போகட்டுமா?
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக