# புத்தன் இறந்து விட்டான். #
ஏதோ ஒரு வேலையாய் ஒரு நாள்
கயை பக்கம் போயிருந்தேன்.
சித்தார்த்தனை புத்தனாக்கிய
போதி மரத்தடியில்
ராகுலனின் மனதோடு
வியாகுலமாய் தனித்திருந்தேன்.
கயை பக்கம் போயிருந்தேன்.
சித்தார்த்தனை புத்தனாக்கிய
போதி மரத்தடியில்
ராகுலனின் மனதோடு
வியாகுலமாய் தனித்திருந்தேன்.
கண்கள் இடுங்கியபடி காவிஉடுத்தியபடி
ஒருவன் வந்தான்.
முகத்துக்கு பின்னே ஒளி வட்டம்,
எனவே
முகத்தில் இருந்தது இருள் மட்டும்.
ஒருவன் வந்தான்.
முகத்துக்கு பின்னே ஒளி வட்டம்,
எனவே
முகத்தில் இருந்தது இருள் மட்டும்.
வந்தவன் என்னோடு
மரத்தையும் சுற்றி வந்தான்.
என்னை விட்டுவிட்டு
மரத்தை பார்த்து
மௌனமாய் துக்கித்தான்.
மரத்தையும் சுற்றி வந்தான்.
என்னை விட்டுவிட்டு
மரத்தை பார்த்து
மௌனமாய் துக்கித்தான்.
சூழ்நிலை ராகத்தில் சிறு சுதி பேதம்.
நான் கேட்டேன். ஐயா நீர் யார்?
வந்தவன் சொன்னான். பிறப்பால் இளவரசன்,
பெயரோ சித்தார்த்தன். வாழ்வில் பற்றின்றி
வந்தமர்ந்தேன் இந்த இடம். புரிகிறதா மகனே,
நீங்கள் எனக்கிட்ட பெயர் கௌதமன்.
நான் கேட்டேன். ஐயா நீர் யார்?
வந்தவன் சொன்னான். பிறப்பால் இளவரசன்,
பெயரோ சித்தார்த்தன். வாழ்வில் பற்றின்றி
வந்தமர்ந்தேன் இந்த இடம். புரிகிறதா மகனே,
நீங்கள் எனக்கிட்ட பெயர் கௌதமன்.
நான் கேட்டேன்.
" ஐயா, நீர் இப்போது இங்கு வந்ததன் நோக்கம்?"
" போதி சில சாதிகளால் வெட்டப்பட
போவதாக சேதி.
போதியை பார்க்க தீராத ஆசை "
புத்தன் சொன்னதை கேட்டு பூமியும் என்னுடன்
குலுங்கி போனது.
" ஐயா, நீர் இப்போது இங்கு வந்ததன் நோக்கம்?"
" போதி சில சாதிகளால் வெட்டப்பட
போவதாக சேதி.
போதியை பார்க்க தீராத ஆசை "
புத்தன் சொன்னதை கேட்டு பூமியும் என்னுடன்
குலுங்கி போனது.
சூழ்நிலை குயிலின் குரலில் சோக ராகம்.
சித்தம் கலங்கி நான் புத்தனிடம் கேட்டேன்.
" ஐயா, நீர் இந்த ஆழி சூழ் அவனிக்கு அளித்த
அமுத வார்த்தை என்ன?"
சித்தம் கலங்கி நான் புத்தனிடம் கேட்டேன்.
" ஐயா, நீர் இந்த ஆழி சூழ் அவனிக்கு அளித்த
அமுத வார்த்தை என்ன?"
புத்தன் சொன்னான்.
" ஆசையை ஒழிக்க சொன்னேன்.
மக்களை அன்புடன் இருக்க சொன்னேன் ".
வெறுப்புடன் நான் புத்தனிடம் சொன்னேன்.
" ஐயா, நீரா புத்தன்?
இல்லை, நீரொரு எத்தன்."
" ஆசையை ஒழிக்க சொன்னேன்.
மக்களை அன்புடன் இருக்க சொன்னேன் ".
வெறுப்புடன் நான் புத்தனிடம் சொன்னேன்.
" ஐயா, நீரா புத்தன்?
இல்லை, நீரொரு எத்தன்."
புரிந்து கொண்ட பின்பு
புன்னகயுடன் சொன்னான் புத்தன்.
ஐயா,
" நான் "
செத்தேன்.
புன்னகயுடன் சொன்னான் புத்தன்.
ஐயா,
" நான் "
செத்தேன்.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக