வெள்ளி, 24 மார்ச், 2017

இன்று என் மகள் ( Michal Sudha ) வழி பேத்தி
இந்த அழகிக்கு பதினோராவது பிறந்த தினம். வாழ்த்துங்கள் உறவுகளே.
# தேவதைக்கும் பிறப்புண்டு #
சொல்லத்தான் நினைக்கிறேன் என்
சொல்லில் அடங்கா உன்னழகை .
வரையத்தான் நினைக்கிறேன் என்
வானம் நிறைக்கும் வானவில் உன்னை.
செதுக்கத்தான் நினைக்கிறேன் என்
செப்புச்சிலை உன் உருவை.
எதிலுமே அடங்காது எழுந்தோடும்
என் மகளே நீ வாழி.
.
முந்திக் கொண்டாள் உன் தாய் என்று
இன்றும் எனக்கு வருத்தமுண்டு.
ஆண்டுகள் பதினொன்று காத்து விட்டேன்.
ஆயிரம் ஆண்டும் காத்திருப்பேன்.
நீ வந்து என்னில் பிறக்கும் வரை என் கர்ப்பங்களுக்கு கெளரவமில்லை தாயே.
என் கண்மணியே நீ வாழி.
உருவம் கருப்பு என்பதில் பெருமைப்படு .
கருப்பில்லா வானவில் எங்குண்டு?
கடவுளும் கருப்பாய் இருந்ததுண்டு.
கருணையில் ஏது குறையுண்டு?
கரும்பும் கருப்பாய் இருப்பதுண்டு.
சுவையில் இனிப்பின்றி எதுவுண்டு?
என் கட்டிக்கரும்பே நீ வாழி.
உதட்டில் வழியும் உன் சிரிப்பில்
விடியட்டும் தினம் எம் உலகம்.
கண்ணில் வழியும் கருணையில் கொஞ்சம்
கடனாய் கேட்கும் என் காதல் நெஞ்சம்
கண்களை மூடிக்கொள்ளாதே
செப்புத் தங்கம் நகையாவதில்லை என்
சொர்ணச் சிலையே நீ வாழி.
தேவதைக்கு பெயர் தேட வேண்டாம் என்று
பிறக்கும்போதே பெயரோடு பிறந்தவளே.
தவமின்றி தந்தவன் உன்னை
பெயரின்றி தருவானா என்ன?
பிறக்கும் போதே தேவதை நீ.
ஆசைக்கு அழைக்கிறோம்
அடியே " ஏஞ்சல் " நீ வாழி.
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு
கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக