# காத்திருக்குது காற்று #
வடக்கு வானம் கருத்துருச்சி
வாடக்காத்து அடிச்சிருச்சி
மழவரப்போவுதுன்னு
எம்மச்சான வரச்சொல்லு
வாடக்காத்து அடிச்சிருச்சி
மழவரப்போவுதுன்னு
எம்மச்சான வரச்சொல்லு
முந்தான வேத்தாச்சு
எம் முழு மூச்சும் சூடாச்சி
சாரக்காத்து ஆரம்பிச்சாச்சி
அவன சாமத்துக்குள்ள வரச் சொல்லு
எம் முழு மூச்சும் சூடாச்சி
சாரக்காத்து ஆரம்பிச்சாச்சி
அவன சாமத்துக்குள்ள வரச் சொல்லு
தென்னம்பூ வெடிச்சாச்சி
தென்றல் காத்தும் வந்தாச்சி
தெக்குத்தெரு மச்சான
தெனத்திக்கும் வரச் சொல்லு.
தென்றல் காத்தும் வந்தாச்சி
தெக்குத்தெரு மச்சான
தெனத்திக்கும் வரச் சொல்லு.
கும்பிட்டு பாத்தாச்சி
குளிர் காத்து அடிச்சாச்சி
எங்காதல எடுத்துச் சொல்லி
அவன காலைக்குள்ள வரச் சொல்லு
குளிர் காத்து அடிச்சாச்சி
எங்காதல எடுத்துச் சொல்லி
அவன காலைக்குள்ள வரச் சொல்லு
குறுக்குமடை தொறந்தாச்சு
கூதக்காத்து அடிச்சாச்சி.
நட்ட நாத்த விட்டுப் புட்டு
நடுராத்திரில வரச் சொல்லு
கூதக்காத்து அடிச்சாச்சி.
நட்ட நாத்த விட்டுப் புட்டு
நடுராத்திரில வரச் சொல்லு
வழியெல்லாம் புழுதியாக்கும்
வறண்ட காத்தும் வந்தாச்சி
விழி நெறஞ்சி வழிஞ்சாச்சி
வீதி எல்லாம் நெருப்பாச்சி
வறண்ட காத்தும் வந்தாச்சி
விழி நெறஞ்சி வழிஞ்சாச்சி
வீதி எல்லாம் நெருப்பாச்சி
இளங்காத்து வீசணும்
இளம கொஞ்சம் வாடணும்
வலை விரிச்சி வச்சிருக்கேன்
வந்து கொஞ்சம் சிக்கச் சொல்லு
இளம கொஞ்சம் வாடணும்
வலை விரிச்சி வச்சிருக்கேன்
வந்து கொஞ்சம் சிக்கச் சொல்லு
காத்து"தானே"னு காத்திருக்க
வச்சான்னா நான்
பொறப்படுவேன் புயலான்னு
அந்தப் பஞ்சுகிட்ட சொல்லிப் புடு
வச்சான்னா நான்
பொறப்படுவேன் புயலான்னு
அந்தப் பஞ்சுகிட்ட சொல்லிப் புடு
வராதுன்னு சொல்லி
சிரிச்சான்னா
நான் " வார்தா "னும் சொல்லிபுடு .
சிரிச்சான்னா
நான் " வார்தா "னும் சொல்லிபுடு .
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக