வெள்ளி, 24 மார்ச், 2017

பிரியமானவளே / னே
மலை உச்சி, மர வீடு , தென்றலால்
சற்றே திறந்திருக்கும் சிறு கதவு...
மலைச்சாரல், மாலை நிலா, நிழலசைவில்
சட்டென துள்ளியோடும் ஒரு புள்ளிமான்...
மெழுகுவர்த்தி, மெல்லிய வெளிச்சத்தை
உடைத்து நுழையும் நிலவொளி ...
மின்மினிகள் துணை கொண்டு என்
கண்மணி உனக்கொரு வைரக்கிரீடம்.
கசங்காத படுக்கை, ஒட்டிய பின்பும் கற்புடன் கறைபடாத இரண்டு தலையணை.....
பாரதியின் கண்ணம்மா கவிதைகள்,
பக்கத்தில் பச்சை கற்பூர வாசனையுடன் நீ!
மயிலோடும் குயிலோடும் மாங்கனியோடும்
அருந்தாத பாலோடும் ஒரு முடியாத முதலிரவு .
உலகமே உடையும் வண்ணம் ஒரு
காமம் இல்லா கட்டியணைப்பு.
உதடுகளால் உயிர் உறிஞ்சுமளவு
இதழோடு இணைபிரியாத ஒற்றை முத்தம்.
ஆடை விலகிய மேனியோடு அலைகடலில்
சிறு படகாய் ஒரு ஆனந்த பயணம் .
சூழ்நிலையுடன் சுதி சேர்க்கும்
பாஷையில் ஒரு மௌனராகம்....
மனதோடு நான் பாடும் மரபு கவிதையை
மௌனமாய் வாசிக்கும் உன் மனம்.....
இன்றே இறப்பதானால் இது போதும் எனக்கு.
வேறென்ன வேண்டும்....உனக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக