வெள்ளி, 24 மார்ச், 2017

# இப்போதே கொன்று விடு #

இரக்கமில்லாத இனியவனே.
இதோ.
வழக்கு தொடுக்கிறாய்,
வன்முறை செய்தேன் என்று.
நியாயம் கூறுங்கள்.
நானோ தேனி.
உதட்டினில் தேன் வைத்தது யார் தப்பு.?
அதில் ஒரு சொட்டு வழிய விட்டது
யார் தப்பு?
நானோ பொய்காரி.
கற்பனையில் காதல் செய்ய
கவிதை கேட்டது யார் தப்பு?
அதை இரவுகளில் வாசிக்க
வெளிச்சப் புன்னகை கேட்டது
யார் தப்பு?
நானோ ரசிகை.
உடையெனும் தந்தி நெகிழ்த்தி வீணையை தானே மீட்டியது யார் தப்பு?
அந்த இசையில் மயங்கி இரவுகளை
விடிய விட்டது யார் தப்பு?
நானோ கடவுள்.
காதலும் கடவுளும் ஒன்றென்று
கவிதை தந்தது யார் தப்பு? - அந்த
கடவுளுக்கே கற்றுக் கொடுக்க
காதலாகவே நீ பிறந்தது யார் தப்பு?
நானே நீதிபதி .
அகலியையை காதலால் மதித்து
கவிதை கேட்டு வேண்டுதல் வைத்தது
உன் தப்பு.
தண்டனை உண்டென்றால் சந்தோசப்படு.
என் அன்புச் சிறையில்
உன் ஆயுள் வரை அடைபடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக