ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக.
மத்திய / மாநில அரசுகளே.
பேய்கள் ஆட்சி செய்யும் நாட்டிலே
பிணம் தின்னும் சாத்திரங்கள்.
பிணம் தின்னும் சாத்திரங்கள்.
உங்கள் சாயம் வெளுத்து விட்டது.
குவாட்டர் கூட்டத்தால்
எங்கள் குடிகளை கெடுத்து விட்டீர்கள்.
குவாட்டர் கூட்டத்தால்
எங்கள் குடிகளை கெடுத்து விட்டீர்கள்.
மலர்க்கூடை சுமந்த தோள்களில்
மலக்கூடை ஏற்றி வீட்டீர்கள்.
மலக்கூடை ஏற்றி வீட்டீர்கள்.
தினவெடுத்த புஜங்களில்
சந்தனம் என்ற பெயரில்
சாக்கடை தேய்த்து விட்டீர்கள்.
சந்தனம் என்ற பெயரில்
சாக்கடை தேய்த்து விட்டீர்கள்.
போராட்ட நேர்ச்சைக்கு
வேண்டி கொண்ட மயிர்களை
வீரத்தை கொன்று விட்டு
மொட்டை போட்டு விட்டீர்கள்.
வேண்டி கொண்ட மயிர்களை
வீரத்தை கொன்று விட்டு
மொட்டை போட்டு விட்டீர்கள்.
காளைகளின் விரைகளை
காயடித்து விட்டீர்கள்.
அந்நிய விந்துக்கு
ஆலாய் பறக்கிறீர்கள்.
காயடித்து விட்டீர்கள்.
அந்நிய விந்துக்கு
ஆலாய் பறக்கிறீர்கள்.
குடியரசு குடியரசு என்று
கூப்பாடு போட்டுக் கொண்டே
குடி கெடுக்கும் வேட்டைகளில்
கொண்டாடி மகிழ்ந்தீர்கள்.
கூப்பாடு போட்டுக் கொண்டே
குடி கெடுக்கும் வேட்டைகளில்
கொண்டாடி மகிழ்ந்தீர்கள்.
வேண்டாமய்யா குடியரசு .
உழைப்பை உறிஞ்சும்
உன்மத்தர் நீங்கள்.
உழைப்பை உறிஞ்சும்
உன்மத்தர் நீங்கள்.
எங்கள் காளைகளை போலவே
எங்களுக்கும் பேசத் தெரியாது.
அவர்களை போலவே
உழைக்க மட்டும் தெரியும்.
எங்களுக்கும் பேசத் தெரியாது.
அவர்களை போலவே
உழைக்க மட்டும் தெரியும்.
தயாராக இருக்கிறோம்.
குடியரசு விடுமுறையை
உதாசீனம் செய்கிறோம்.
குடியரசு விடுமுறையை
உதாசீனம் செய்கிறோம்.
அலுவலகங்களை திறந்து வை.
அன்றைய தினமும்
இரட்டிப்பாய் பணி செய்கிறோம்.
அன்றைய தினமும்
இரட்டிப்பாய் பணி செய்கிறோம்.
கவிதாயினி எழில்விழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக